May 8, 2020, 11:49 AM IST
இந்தியாவில் இன்று(மே8) காலை நிலவரப்படி, 56342 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. மகாராஷ்டிராவில் மட்டும் 17,894 பேருக்குத் தொற்று உறுதியானது. சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவிய கொரோனா, இந்தியாவில் இன்னும் பரவிக் கொண்டிருக்கிறது. தினமும் புதிதாக 3 ஆயிரம் பேருக்குப் பரவி வருகிறது. Read More
May 8, 2020, 10:33 AM IST
வெண்ணிலா கபடி குழு உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருப்பதுடன் தேசிய விருது பெற்றவர் அப்புக்குட்டி. கொரோனா காலத்தில் வீட்டுக்குள்ளேயே இருக்கும் அவர் அதுபற்றி கூறியதாவது:இந்தக் காலம் ஒரு சோதனையான காலம் மட்டுமல்ல இக்கட்டான நெருக்கடியான காலம் Read More
May 8, 2020, 10:08 AM IST
எம்.எக்ஸ்.பிளேயர் வழங்கும் முற்றிலும் புதுமையான நகைச்சுவை கலந்த காதல் தொடர் தந்தூரி இட்லி. இதன் அனைத்து பகுதிகளையும் தற்போது இலவசமாகப் பார்க்கலாம். வடக்கும் தெற்கும் எதிரெதிர் துருவங்கள் என்றாலும், அருகாமையில் வந்தால் என்ன நடக்கும் என்பது ஒரு சுவையான கற்பனை. Read More
May 7, 2020, 16:08 PM IST
நடிகர் விவேக் கொரோனா ஊரடங்கின் போது விழிப்புணர்வு வீடியோக்கள் வெளியிட்டு வந்தார். இந்நிலையில் திடீரென்று டிவிட்டரிலிருந்து தற்காலிகமாக விலகுவதாகவும் அதற்குத் தனிப்பட்ட காரணங்கள் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். தற்போது மீண்டும் டிவிட்டரில் இணைந்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். Read More
May 7, 2020, 16:04 PM IST
தளபதி 65 படத்தை ஏ,ஆ,ர்,முருகதாஸ் இயக்க உள்ளார். துப்பாக்கி 2ம் பாகமாக இது உருவாகவிருக்கிறது. இதில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது,இப்படத்துக்கு இசை அமைக்கப்போவது யார் என்று தெரியாமலிருந்த நிலையில் எஸ்,தமன் இசை அமைக்க உள்ளதாகத் தகவல் வெளியானது, Read More
May 7, 2020, 12:58 PM IST
கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளைத் திறந்திருக்கிறது. இதற்குப் பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. பிரபல திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான் வெளியிட்டுள்ள அறிக்கையில் மதுக் கடைகள் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். Read More
May 7, 2020, 11:42 AM IST
சென்னை தவிரப் பிற மாவட்டங்களில் இன்று டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன.நாடு முழுவதும் 53 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இந்நோய் பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஏப்.20 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. Read More
May 7, 2020, 10:41 AM IST
1980கள் பின்னணியில் நடந்த கதையாக உருவானது சுப்ரமணியபுரம். சசிகுமார், ஜெய் ஆகியோருடன் இணைந்து நடித்திருந்தார் சுவாதி. மேலும் ஒரு சில தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்தவர் திடீரென்று கடந்த 2 வருடத்துக்கு முன்பு தனது பாய் பிரண்டு விகாஸ் வாசு என்பவரை மணந்து கொண்டு நடிப்புக்கு முழுக்கு போட்டார். Read More
May 7, 2020, 10:13 AM IST
இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 52,952 ஆக உயர்ந்துள்ளது. இந்நோய்க்கு இது வரை 1783 பேர் பலியாகியுள்ளனர்.சீன வைரஸ் நோயான கொரோனா, இந்தியாவிலும் பரவியிருக்கிறது. தினம் தோறும் மூவாயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பரவிவருகிறது. Read More
May 7, 2020, 10:04 AM IST
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 771 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.சீனாவின் உகான் நகரில் தோன்றி உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரோனா வைரஸ், தமிழகத்திலும் வேகமாகப் பரவி வருகிறது. Read More