May 21, 2019, 12:12 PM IST
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை கருத்துத் திணிப்பு என்று முதல்வர் பழனிச்சாமி கூறியிருந்தார். அதற்கு நேர்மாறாக துணை முதல்வர் ஓபிஎஸ், மக்களின் மனநிலையை பிரதிபலித்துள்ளது எனக் கூறியுள்ளது அதிமுகவினரிடையே சர்ச்சையையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது Read More
May 21, 2019, 10:08 AM IST
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் என்பது ஒரு மோசடி வேலை .. இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் கவலைப்பட்டு சோர்வடைந்து விட வேண்டாம் என உருக்கமாக பேசும் ஆடியோ ஒன்றை பிரியங்கா காந்தி வெளியிட்டு வேண்டுகோள் விடுத்துள்ளார். Read More
May 21, 2019, 08:24 AM IST
பா.ஜ.க. மீண்டும் ஆட்சியமைக்கும் என்ற கருத்து கணிப்புகள் வரவே, டி.ஆர்.எஸ் தலைவர் சந்திரசேகர ராவ், சைலன் மோடுக்கு போய் விட்டார் Read More
May 20, 2019, 16:59 PM IST
தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகளில் எல்லா சேனல்களுமே பா.ஜ.க.வுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கும் என கூறியிருப்பதால், இதில் பா.ஜ.க. சதி எதுவும் இருக்குமோ என்று எதிர்க்கட்சிகள் குழப்பத்தில் மூழ்கியுள்ளன Read More
May 20, 2019, 14:00 PM IST
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் எல்லாம் பாஜகவுக்கு சாதகமாகவே வந்துள்ள நிலையில், மோசடி கணிப்புகளை புறந்தள்ளி வாக்கு எண்ணிக்கையில் கவனம் வைப்போம் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தனது கட்சியினரை உஷார்படுத்தியுள்ளார் Read More
May 20, 2019, 12:43 PM IST
டி.வி. சேனல்கள் வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் பா.ஜ.க. அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று வெளியானதால், எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கோபம் அடைந்துள்ளனர். கணிப்புகள் எப்போதுமே தவறாக இருக்கின்றன என்று காங்கிரஸ் கூறியுள்ளது Read More
May 20, 2019, 12:20 PM IST
‘‘நாங்கள் கருத்து கணிப்புகளை பொருட்படுத்துவது இல்லை. வரும் 23ம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் வரை காத்திருப்போம். முடிவுகள் வந்த பிறகே எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும்’’ என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். Read More
May 20, 2019, 11:49 AM IST
ஒடிசாவில் சட்டசபைத் தேர்தலில் ஆளும் பிஜு ஜனதா தளம்(பிஜேடி) கட்சியே வென்று 5வது முறையாக ஆட்சியமைக்கும் என்று கருத்து கணிப்புகளில் தெரிய வந்துள்ளது Read More
May 20, 2019, 11:07 AM IST
தமிழகத்தில் டி.டி.வி.தினகரன் தலைமையிலான அ.ம.மு,க. கட்சிக்கு நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதி கூட கிடைக்காது என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் கூறுகின்றன Read More
May 19, 2019, 21:25 PM IST
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பெரும்பாலானவை பாஜகவுக்கு சாதகமாகவே வெளிவந்துள்ள நிலையில், இந்தக் கணிப்புகளை நம்ப வேண்டாம். முன்னரே இப்படி ஒரு கணிப்புகளை வெளியிடச் செய்து வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்ற திட்டமிட்டுள்ளது பாஜக என்று மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை செய்துள்ளார். Read More