Aug 19, 2019, 12:57 PM IST
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில், மீண்டும் கன மழை பெய்துள்ளதால் காவிரியில் நீர்வரத்து 33 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்பதால் 113.86 அடியாக மேட்டூர் அணை நீர்மட்டம் விரைவில் முழு கொள்ளளவை எட்டிவிட வாய்ப்புள்ளது. Read More
Aug 19, 2019, 10:07 AM IST
கர்நாடகாவில் முதல்வராக எடியூரப்பா பதவியேற்று 25 நாட்கள் கடந்த நிலையிலும் இழுபறியாகவே இருந்து வந்த அமைச்சர்கள் தயாரிப்பு பட்டியல் ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. முதற்கட்டமாக 15 அமைச்சர்கள் நாளை பதவியேற்க உள்ளனர். Read More
Aug 17, 2019, 13:51 PM IST
பெஹ்லுகான் கொலை வழக்கின் தீர்ப்பை விமர்சித்ததாக பிரியங்கா காந்தி மீது ஜெய்ப்பூர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. Read More
Aug 17, 2019, 13:42 PM IST
கர்நாடகாவில் முதல்வராக எடியூரப்பா பொறுப்பேற்று 23 நாட்களை கடந்து விட்டது. மழை, வெள்ளத்தால் அம்மாநிலமே தத்தளிக்கும் நிலையில், அமைச்சரவை பட்டியலை இறுதி செய்ய முடியாமல் ஒன் மேன் ராஜ்ஜியம் நடத்தி வருவதை எதிர்க்கட்சிகளும் விமர்சித்து வருகின்றன. இதனால் கடந்த 2 நாட்களாக டெல்லியில் முகாமிட்டுள்ள எடியூரப்பா, அமைச்சரவைப் பட்டியலை இறுதி செய்து விட்டே திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Read More
Aug 13, 2019, 10:12 AM IST
காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை திறந்து வைத்தார் . தொடர்ந்து 137 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். Read More
Aug 12, 2019, 14:02 PM IST
தைரியமாகவும் துணிச்சலாகவும் 2.5 கி.மீ தூரம் வெள்ளத்தில் எதிர் நீச்சல் போட்டு கரை சேர்ந்து, பெங்களூருவில் நடந்த போட்டியிலும் பங்கேற்றார். இறுதிப் போட்டி வரை சென்று வெள்ளிப்பதக்கம் வென்ற கர்நாடகத்தைச் சேர்ந்த வீரரின் துணிச்சல் பெரும் பாராட்டை பெற்றுள்ளது. Read More
Aug 11, 2019, 13:05 PM IST
கர்நாடகாவில் கொட்டித் தீர்க்கும் கன மழையால் அந்த மாநிலத்தில் கபினி, ஹேமாவதி, ஹாரங்கி அணைகள் நிரம்பி வழிகின்றன. கே.ஆர் எஸ்.அணையும் நிரம்பும் நிலையில் உள்ளதால் காவிரியில் தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு 2.4 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. Read More
Aug 10, 2019, 12:11 PM IST
கேரளாவில் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கன மழை கொட்டித்தீர்த்து அம்மாநில மக்களை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளது. இன்னும் சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து, மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளதால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். அதிலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தொகுதியான வயநாடு மிக மோசமான பாதிப்புக்கு ஆளாகியுள்ளதால், நாளை அங்கு அவர் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More
Aug 10, 2019, 10:39 AM IST
கடந்த 5 நாட்களுக்கும் மேலாக கர்நாடகாவில் கொட்டித் தீர்க்கும் கன மழையால் அந்த மாநிலத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. கபினி, ஹேமாவதி, ஹாரங்கி அணைகள் நிரம்பி வழிவதால் காவிரியில் 1.5 லட்சம் கன அடிக்கு மேல் நீர் திறந்து விடப்பட்டு கட்டுக்கடங்காத வெள்ளமாக தமிழகத்திற்கு சீறிப் பாய்ந்து வருகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. Read More
Aug 8, 2019, 10:53 AM IST
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டித் தீர்க்கும் கை மழையால் கபினி அணையிலிருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 55 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கேரளாவிலும் பெய்து வரும் கன மழையால் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில், ஒரே நாளில் 80 செ.மீ பெய்த வரலாறு காணாத மழையால் இயல்பு வாழ்க்கை முடங்கிப் போய் உள்ளது. Read More