அதிக அளவில் குடி... மருத்துவமனையில் டீகோ மரடோனா!

Diego maradona admitted in hospital

by Sasitharan, Nov 3, 2020, 21:16 PM IST

அர்ஜென்டினா நாட்டின் புகழ்பெற்ற கால்பந்து வீரர் டீகோ மரடோனா. கால்பந்து உலகில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள இவருக்கு தற்போது 60 வயது ஆகிறது. கேப்டன், பயிற்சியாளராகவும் பணியாற்றி இருக்கிறார்.இதற்கிடையே, மரடோனாவுக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டு இருக்கிறது. இதையடுத்து அவர் அர்ஜென்டினாவின் லா பிளாட்டா பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக பேசியுள்ள மருத்துவமனை நிர்வாகம். ``கொரோனா பாதிப்பு எதுவும் இல்லை. அதேநேரம் உடல் அளவு எந்த பாதிப்பும் இல்லை. என்றாலும், மனதளவில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது" எனத் தெரிவித்துள்ளது.

அதிக அளவில் மதுபானம் உட்கொண்டது, மனரீதியாக பாதிக்கப்பட்டது மற்றும் அனைத்து சுகாதார விசயங்களாலும் மரடோனாவின் உடல்நிலையில் சிக்கல் ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து மரடோனா மருத்துவமனையில் 3 முதல் 5 நாட்கள் வரை தங்கியிருந்து சிகிச்சை பெற்று கொள்வார் எனக் கூறப்பட்டுள்ளது.

You'r reading அதிக அளவில் குடி... மருத்துவமனையில் டீகோ மரடோனா! Originally posted on The Subeditor Tamil

More Football News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை