Jul 26, 2019, 12:17 PM IST
கர்நாடக அரசியலில் அடுத்த திருப்பமாக எடியூரப்பாவை முதல்வர் பதவியேற்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். இன்று மாலை 6 மணிக்கு பதவியேற்கும் எடியூரப்பாவை, ஒரு வாரத்திற்குள் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் கெடு விதித்துள்ளார். Read More
Jul 25, 2019, 22:05 PM IST
கர்நாடகாவில் ஒரு சுயேட்சை மற்றும் 2 காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் என 3 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ்குமார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். நடப்பு சட்டசபையின் ஆயுளான மே 2023 வரை இவர்கள் 3 பேரும் தேர்தலில் போட்டியிட முடியாது எனவும் சபாநாயகர் அறிவித்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jul 25, 2019, 10:21 AM IST
கர்நாடக அரசியலில் 2 வாரங்களுக்கும் மேலாக வீசிய சூறாவளி குமாரசாமி அரசை காவு வாங்கி விட்டது. அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதில் முக்கிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் அமைதி காக்கின்றனர். அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரத்தில் சபாநாயகர் ரமேஷ்குமார் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பதைப் பொறுத்தே, ஆட்சியமைக்க உரிமை கோரும் முடிவில் பாஜக தரப்பு உள்ளதாக கூறப்படுகிறது. Read More
Jul 24, 2019, 13:03 PM IST
கர்நாடகாவில் கால்நடைகள் ஏலத்தை பாஜக வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது என்று காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் விமர்சித்துள்ளார். Read More
Jul 24, 2019, 10:07 AM IST
எல்லாவற்றையும் வாங்கி விட முடியாது என்பதை பாஜக ஒரு நாள் உணர்ந்து கொள்ளும் என்று பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். Read More
Jul 24, 2019, 09:38 AM IST
கர்நாடக மாநிலத்தில் நாடு சுதந்திரம் பெற்றது முதல் கடந்த 72 ஆண்டுகளில் 32 பேர் முதல்வர்களாக இருந்துள்ளனர். இதில் 4 பேர் மட்டுமே 5 ஆண்டுகள் முழுமையாக பதவி வகித்துள்ளனர். தற்போது 4-வது முறையாக முதல்வராகப் போகும் பாஜகவின் எடியூரப்பாவின் கதை தான் மிகவும் சோகமானது. முதல் முறை முதல்வராக 7 நாட்களும், அடுத்த முறை 3 ஆண்டுகளும், கடைசியாக 2 1/2 நாட்களும் மட்டுமே முதல்வராக இருந்துள்ளார். Read More
Jul 23, 2019, 21:48 PM IST
கடந்த 17 நாட்களாக கர்நாடகாவில் நடந்து வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்தது. நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்த குமாரசாமி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். Read More
Jul 23, 2019, 11:01 AM IST
காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற கட்சிகளின் அதிருப்தி எம்எல்ஏக்கள் அனைவரும் இன்று காலை நேரில் ஆஜராக வேண்டும் என கர்நாடக சபாநாயகர் உத்தரவிட்டிருந்த நிலையில், தங்களுக்கு 4 வார அவகாசம் வேண்டும் எனக் கூறி எம்எல்ஏக்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். இதனால் குமாரசாமி அரசின் கடைசி நம்பிக்கையும் தகர்ந்து, ஆட்சி கவிழ்வது உறுதியாகியுள்ளது. Read More
Jul 23, 2019, 10:07 AM IST
கர்நாடக மாநிலத்தில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான காங் - மஜத கூட்டணி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துவதை காலம் தாழ்த்தி வருகிறது. அதிருப்தி எம்எல்ஏக்களை எப்படியாவது வளைத்து விடலாம் என்ற நப்பாசையில், நேற்றும் பல்வேறு நாடகங்களை நடத்தி, சட்டப்பேரவையில் நள்ளிரவு வரை நீடித்த விவாதம் கடைசியில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே ஒத்திவைக்கப்பட்டது. இதனால் இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு கட்டாயம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Jul 22, 2019, 12:19 PM IST
ராஜினாமா கடிதம் கொடுத்த அதிருப்தி எம்எல்ஏக்கள் அனைவரும் நாளை காலை 11 மணிக்கு தம் முன் நேரில் ஆஜராக வேண்டும் என கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் அடுத்த அதிரடி ஆயுதத்தை தொடுத்துள்ளார். இதனால் சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கப் போவதில்லை என்பது உறுதியாகியுள்ளது. Read More