Aug 16, 2019, 12:14 PM IST
காஷ்மீரில் கட்டுப்பாடுகளை தளர்த்தவும், நிலைமை சீரடைவதற்கும் சில நாட்கள் காத்திருக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370, 35ஏ ரத்து செய்யப்பட்டது. அந்த மாநிலம், 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, காஷ்மீரில் முன்னாள் முதலமைச்சர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா மற்றும் நூற்றுக்கணக்கானோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். Read More
Aug 16, 2019, 09:35 AM IST
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல்சட்டப் பிரிவு 370ஐ ரத்து செய்தது தொடர்பாக, ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் இன்று ஆலோசனை நடத்தவுள்ளது. Read More
Aug 13, 2019, 14:46 PM IST
காஷ்மீர் நிலைமை பற்றி தவறாக பேசி வரும் ராகுல் காந்தி உண்மை நிலையை நேரில் கண்டறிய வரத் தயாரா? தனி விமானம் ஏற்பாடு செய்கிறேன் என்று அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் சவால் விடுத்திருந்தார். இந்த சவாலை ஏற்றுள்ள ராகுல், தனி விமானம் எல்லாம் வேண்டாம். அங்குள்ள மக்களையும், படை வீரர்களையும் சுதந்திரமாக சந்தித்துப் பேச அனுமதி மட்டும் கொடுத்தால் போதும் வரத் தயார் என்று பதிலத்துள்ளார். Read More
Aug 13, 2019, 12:26 PM IST
‘காஷ்மீரில் வன்முறைகள் நடப்பதாக கூறும் ராகுல்காந்திக்கு கவர்னர் சத்யபால் மாலிக் கண்டனம் தெரிவித்துள்ளார். ‘‘விமானம் அனுப்புகிறேன், நேரில் வந்து பார்த்து விட்டு பேசுங்க...’’ என்று அவர் ராகுலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். Read More
Aug 12, 2019, 13:26 PM IST
காஷ்மீரில் பாஜக காலடி எடுத்து வைக்க காரணமாக இருந்தது நீயா? நானா? என உமர் அப்துல்லாவும் மெகபூபா முப்தியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட தகவல் வெளியாகி பரபரப்பு கிளம்பியுள்ளது. Read More
Aug 12, 2019, 13:14 PM IST
நாடு முழுவதும் இஸ்லாமியர்களால் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியர்களின் பண்டிகைகளில் பக்ரீத் பண்டிகை மிக முக்கியமானது. துல் ஹஜ் மாதத்தின் 10-வது நாளில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. Read More
Aug 11, 2019, 12:40 PM IST
காஷ்மீர் விவகாரத்தில் அமித் ஷா எப்படிப்பட்டவர் என்பது நாட்டுக்கே தெரிந்துவிட்டது என நடிகர் ரஜினிகாந்த் புகழ்ந்துள்ளார்.பிரதமர் மோடியும், அமித் ஷாவும் கிருஷ்ணரும் அர்ஜூனனும் போன்றவர்கள் என்றும் சென்னையில் நடந்த விழாவில் ரஜினி, ஓகோவென புகழ்ந்து தள்ளியுள்ளார். Read More
Aug 10, 2019, 21:14 PM IST
ஜம்மு -காஷ்மீர் தொடர்பான மத்திய அரசின் புதிய சட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும், அம்மாநில மக்களின் கருத்தை கேட்டறிய அனைத்துக் கட்சிகளின் குழுவை உடனே அனுப்ப வேண்டும் எனவும் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. Read More
Aug 10, 2019, 13:58 PM IST
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு ரத்து செய்துள்ளது. மேலும், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரு யூனியன் பிரதேசங்களாக அம்மாநிலம் பிரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மசோதாக்கள், தீர்மானங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. Read More
Aug 10, 2019, 13:25 PM IST
காஷ்மீருக்கு சிறப்பு சலுகை அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது, இந்திய அரசியல் சட்டத்திற்கு உட்பட்டதுதான் என்று இந்தியாவின் நடவடிக்கையை ரஷ்யா ஆதரித்துள்ளது. Read More