Jul 31, 2019, 12:55 PM IST
மகாராஷ்டிராவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவரும், தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மூவரும் நேற்று பதவியை ராஜினாமா செய்தனர். அவர்கள் இன்று முதலமைச்சர் பட்நாவிஸ் முன்னிலையில் பாஜகவில் சேர்ந்தனர். Read More
Jul 29, 2019, 10:06 AM IST
உத்தரப்பிரதேசத்தில் பாஜக எம்.எல்.ஏ. மீது பாலியல் பலாத்கார புகார் அளித்த இளம் பெண்ணை கொல்ல நடந்த முயற்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jul 29, 2019, 09:16 AM IST
கர்நாடக சபாநாயகரின் தகுதி நீக்க நடவடிக்கையை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாக பதவி பறிக்கப்பட்ட 17 எம்எல்ஏக்களும் அறிவித்துள்ளனர். Read More
Jul 28, 2019, 15:59 PM IST
கர்நாடகாவில் பாஜகவின் எடியூரப்பா முதல்வராகி நாளை நம்பிக்கை வாக்கு கோர உள்ளார்.இந்நிலையில் ஒரு நாள் முன்னதாக, மேலும் 14 அதிருப்தி எம்எல்ஏக்களை சபாநாயகர் ரமேஷ்குமார் அதிரடியாக தகுதி நீக்கம் செய்துள்ளார். இதனால் எடியூப்பா, நாளை நம்பிக்கை வாக்கெடுப்பில் எளிதாக வெல்வது உறுதி என்றாலும், சபாநாயகரின் அவசர முடிவுக்கும் பல காரணங்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. Read More
Jul 28, 2019, 13:00 PM IST
கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மாதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளைச் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் 14 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ்குமார் அதிரடி காட்டியுள்ளார். ஏற்கனவே 3 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் பதவி பறிக்கப்பட்ட எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. Read More
Jul 23, 2019, 11:01 AM IST
காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற கட்சிகளின் அதிருப்தி எம்எல்ஏக்கள் அனைவரும் இன்று காலை நேரில் ஆஜராக வேண்டும் என கர்நாடக சபாநாயகர் உத்தரவிட்டிருந்த நிலையில், தங்களுக்கு 4 வார அவகாசம் வேண்டும் எனக் கூறி எம்எல்ஏக்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். இதனால் குமாரசாமி அரசின் கடைசி நம்பிக்கையும் தகர்ந்து, ஆட்சி கவிழ்வது உறுதியாகியுள்ளது. Read More
Jul 20, 2019, 13:55 PM IST
சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. Read More
Jul 17, 2019, 11:52 AM IST
கர்நாடக எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில் , சபாநாயகருக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் இந்தத் தீர்ப்பு, முதல்வர் குமாரசாமி தரப்புக்கு சற்று நிம்மதியைக் கொடுத்துள்ளது என்றே கூறலாம். Read More
Jul 16, 2019, 12:52 PM IST
கர்நாடக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு நிலவும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்எல்ஏ ரோஷன் பெய்க் என்பவர் தனி விமானத்தில் தப்பிக்க முயற்சிக்க, அவரை மோசடி வழக்கில் சிறப்பு விசாரணை குழுவினர் கைது செய்துள்ளனர். பெங்களூரு விமான நிலையத்தில் நள்ளிரவில் அரங்கேறிய இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jul 15, 2019, 20:33 PM IST
கர்நாடக சட்டப்பேரவையில் வரும் 18-ந் தேதி முதல்வர் குமாரசாமியின் நம்பிக்கை கோரும்.தீர்மானத்தின் மீது நடைபெறும் வாக்கெடுப்பின் அதிருப்தி எம்எல்ஏக்கள் பங்கேற்க மாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.மும்பையில் எம்எல்ஏக்கள் தங்கியுள்ள சொகுசு ஹோட்டலிலும் ஏகப்பட்ட கெடுபிடிகள் விதிக்கப்பட்டு, கூடுதல் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. Read More