May 16, 2019, 10:50 AM IST
திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 தொகுதிகளில் இடைத்தேர்தல் பிரச்சாரம் நாளை மாலையுடன் முடிவடையும் நிலையில், ஒரு பக்கம் தலைவர்கள் இறுதிக்கட்ட ஓட்டு வேட்டையில் மும்முரமாக இருக்க, ஓட்டுக்கு பணப்பட்டுவாடாவும் ஜரூராக நடந்து வருகிறது. பட்டுவாடாவை தடுக்க முடியாமல், தேர்தல் அதிகாரிகளால் கைகட்டி வேடிக்கை தான் பார்க்க முடிகிறது என்ற அளவுக்கு பிரதான கட்சிகள் அனைத்தும் இந்த விஷயத்தில் கூட்டணி அமைத்து பகிரங்கமாகவே பண வினியோகம் செய்து வருகின்றனர் Read More
May 13, 2019, 11:36 AM IST
இடைத்தேர்தல் நடைபெறும் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் ஓட்டுக்கு ரூ.1000 என ஒரே நாளில் பணப்பட்டுவாடாவை கனகச்சிதமாக செய்து முடித்துள்ளனர் டிடிவி தினகரனின் அமமுக கட்சியினர் .இதனால் 4 தொகுதிகளிலும் ஆயிரம் வந்துச்சா?வாங்கிட்டியா? என்பது தான் ஒரே பேச்சாகி பரபரத்துக் கிடக்கிறது இடைத் தேர்தல் களம் Read More
May 4, 2019, 21:22 PM IST
திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 தொகுதிகளில் வரும் 19-ந் தேதி நடைபெற உள்ள இடைத் தேர்தலை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.தனது பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின் தினமும் புதுப்புது யுக்திகளை கையாள்வது பொது மக்களிடையேயும், கட்சியினரிடையேயும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது Read More
May 4, 2019, 20:27 PM IST
இடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளில், அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 4 நாட்கள் பிரச்சாரம் செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
May 2, 2019, 18:23 PM IST
மே 19-ந் தேதி நடைபெற உள்ள திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கு கடந்த 22-ம் தேதி வேட்பு மனுத் தாக்கல் தொடங்கி 29-ந் தேதி முடிவடைந்தது. 4 தொகுதிகளிலும் மொத்தம் 256 பேர் வேட்பு மனு செய்திருந்தனர். இதில் 30-ந் தேதி நடந்த வேட்பு மனு பரிசீலனையில் 104 பேரின் மனுக்கள் தள்ளுபடியானது. இன்றும் 15 பேர் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்ற நிலையில், இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது Read More
May 1, 2019, 08:28 AM IST
இடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் நாளை முதல் களை கட்டத் தொடங்குகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் நாளை முதல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளனர் Read More
May 1, 2019, 08:25 AM IST
டிடிவி தினகரனுடன் முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அதிமுக எம்எல்ஏக்கள் அனைவருமே படம் எடுத்துக் கொண்டவர்கள் தான் என்றும் அவர்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன? என்றும் அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி கேள்வி எழுப்பியுள்ளார் Read More
Apr 30, 2019, 20:10 PM IST
Apr 30, 2019, 18:51 PM IST
அதிமுக கொறடா புகாரின் பேரில் தினகரன் தரப்பு எம்எல்ஏக்கள் 3 பேருக்கும் விளக்கம் கேட்டு தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பி உள்ளதால், அவர்கள் மீது கட்சித் தாவல் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதியாகிவிட்டதாக தெரிகிறது Read More
Apr 30, 2019, 13:32 PM IST
இடைத் தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளில் சூலூர் தொகுதியில் இப்போதே வெற்றி பெற்று விட்ட சந்தோஷத்தில் குதியாட்டம் போடுகின்றனர் டிடிவி தினகரன் தரப்பினர். தமக்கு சீட் தராததற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணியே காரணம் என்று பகிரங்கமாக குற்றச்சாட்டு வைத்துள்ள செ.ம.வேலுச்சாமி, அதிமுக தேர்தல் பணிகளில் சுத்தமாக ஒதுங்கி விட்டார். மேலும் தமது தரப்பு ஒட்டுமொத்த ஆதரவாளர்களையும் அமமுக வேட்பாளருக்கு ஆதரவாக அப்பட்டமாக களத்தில் இறக்கி விட்டுள்ளதால் அதிமுக வேட்பாளர் பெரும் கலக்கத்தில் உள்ளார் Read More