Jul 29, 2019, 14:01 PM IST
கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் ரமேஷ்குமார் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு வெற்றி பெற்ற நிலையில், நிதி மசோதாவை நிறைவேற்றிய அடுத்த நிமிடமே தமது பதவியை ராஜினாமா செய்வதாக ரமேஷ்குமார் அதிரடியாக அறிவித்தார். Read More
Jul 29, 2019, 10:52 AM IST
கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் மீது பாஜக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்துள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார் என கூறப்படுகிறது. Read More
Jul 29, 2019, 09:16 AM IST
கர்நாடக சபாநாயகரின் தகுதி நீக்க நடவடிக்கையை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாக பதவி பறிக்கப்பட்ட 17 எம்எல்ஏக்களும் அறிவித்துள்ளனர். Read More
Jul 28, 2019, 15:59 PM IST
கர்நாடகாவில் பாஜகவின் எடியூரப்பா முதல்வராகி நாளை நம்பிக்கை வாக்கு கோர உள்ளார்.இந்நிலையில் ஒரு நாள் முன்னதாக, மேலும் 14 அதிருப்தி எம்எல்ஏக்களை சபாநாயகர் ரமேஷ்குமார் அதிரடியாக தகுதி நீக்கம் செய்துள்ளார். இதனால் எடியூப்பா, நாளை நம்பிக்கை வாக்கெடுப்பில் எளிதாக வெல்வது உறுதி என்றாலும், சபாநாயகரின் அவசர முடிவுக்கும் பல காரணங்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. Read More
Jul 28, 2019, 13:00 PM IST
கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மாதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளைச் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் 14 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ்குமார் அதிரடி காட்டியுள்ளார். ஏற்கனவே 3 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் பதவி பறிக்கப்பட்ட எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. Read More
Jul 28, 2019, 10:36 AM IST
கர்நாடகத்தில் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசுக்கு, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆதரவளிக்கப் போவதாக வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை என்று முன்னாள் முதல்வர் குமாரசாமி மறுத்துள்ளார். Read More
Jul 27, 2019, 14:29 PM IST
அரசியலில் நட்போ , பகையோ நிரந்தரமில்லை என்பது கர்நாடக அரசியல்வாதிகளுக்கு ஏகப் பொருத்தமாகிவிட்டது போலும். பாஜகவின் சதியால் ஆட்சியை இழந்த குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம், இப்போது எடியூரப்பாவுக்கு ஆதரவு தரப்போவதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jul 26, 2019, 22:53 PM IST
கர்நாடக முதல்வராக 3 முறை பதவி வகித்த எடியூரப்பா ஒரு முறை கூட 5 ஆண்டு பதவிக்காலத்தை முடித்ததில்லை. இந்த முறையாவது முழு பதவிக்காலத்தை முடிக்க வேண்டுமென்று தனது பெயரை நியூமராலஜிப்படி ஸ்பெல்லிங் மாற்றிக் கொண்டார். Read More
Jul 26, 2019, 14:00 PM IST
கர்நாடகாவில் போதிய மெஜாரிட்டி இல்லாத நிலையில் ஆட்சியமைக்க உரிமை கோரி, நாடாளுமன்ற ஜனநாயகத்தை பாஜக சிதைத்து விட்டதாகவும், ஆளுநரும் அதற்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ளதாகவும் கர்நாடக காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. Read More
Jul 26, 2019, 12:17 PM IST
கர்நாடக அரசியலில் அடுத்த திருப்பமாக எடியூரப்பாவை முதல்வர் பதவியேற்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். இன்று மாலை 6 மணிக்கு பதவியேற்கும் எடியூரப்பாவை, ஒரு வாரத்திற்குள் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் கெடு விதித்துள்ளார். Read More