கருணாநிதி நினைவிடத்தில் கதிர் ஆனந்த் மரியாதை

வேலூரில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் இன்று காலை கட்சித் தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர், கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். Read More


முரசொலி அலுவலகத்தில் கருணாநிதி சிலை ; மம்தா பானர்ஜி திறந்து வைத்தார்

தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவராக 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவராகத் திகழ்ந்த கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி முரசொலி அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையை மேற்கு வங்க முதல்வர்ர் மம்தா பானர்ஜி திறந்து வைத்தார். Read More


கருணாநிதி சிலை திறப்பு, நினைவு தின பொதுக் கூட்டம் ; மம்தா பானர்ஜி பங்கேற்பு

கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திமுக சார்பில் சென்னையில் இன்று மாலை அவருடைய சிலை திறப்பு விழா மற்றும் நினைவு தின பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். Read More


முதலாவது நினைவு தினம்; கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மலர் தூவி அஞ்சலி

கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கவிஞர் வைரமுத்து, கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி மற்றும் பல்வேறு தலைவர்களும் கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர். Read More


கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு தினம்: சிலை திறப்பு.. பேரணி..பொதுக் கூட்டம்..! மு.க.ஸ்டாலின் உருக்கமான அழைப்பு

திமுக தலைவர் மு.கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நாளை சென்னையில் அவருடைய சிலை திறப்பு விழா , பேரணி, பொதுக் கூட்டத்திற்கு திமுக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் உருக்கமான அழைப்பு விடுத்துள்ளார். Read More


கருணாநிதி சிலை திறப்பு விழா: ரஜினி, கமலுக்கு திமுக அழைப்பு

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோருக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. Read More


முரசொலி அலுவலகத்தில் கருணாநிதி சிலை - மம்தா பானர்ஜி திறந்து வைக்கிறார்

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை, சென்னையில் உள்ள முரசொலி அலுவலகத்தில் அமைக்கப்படுகிறது. இதனை கருணாநிதியின் முதலாவது நினைவு தினமான ஆகஸ்ட் 7-ந் தேதி மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More


கருணாநிதியின் 96 -வது பிறந்தநாள்... கலைஞர் சமாதியில் மு.க.ஸ்டாலின், திமுகவினர் மலர் அஞ்சலி

முன்னாள் முதல்வர், மறைந்த மு.கருணாநிதியின் 96 -வது பிறந்த நாளை திமுகவினர் இன்று உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். மெரினாவில் உள்ள கலைஞர் சமாதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக நிர்வாகிகள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் என பலரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். Read More


ஜூன் 3 ; உடன்பிறப்பே... எழுந்து வா உடன்பிறப்பே.. கலைஞர் இல்லா முதல் பிறந்தநாள் விழா

ஐந்து முறை தமிழகத்தின் முதல்வர் .. 50 ஆண்டு காலம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர்.. 60 ஆண்களுக்கும் மேலாக சட்டமன்ற உறுப்பினர்... என கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு சரித்திரம் படைத்தவர் கலைஞர் கருணாநிதி. தமிழகத்தை சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் இந்தியாவின் முன்னணி மாநிலமாக உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகித்தவர். இந்திய அரசியலில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் தான் கலைஞர் என்று தமிழக மக்களால் அன்புடன் உச்சரிக்கப்பட்டவர்.இன்று அவருடைய 96-வது பிறந்த தினம் Read More


கருணாநிதி மரணம் குறித்து விசாரணையாம்...ஏட்டிக்குப் போட்டியாக எடப்பாடி அறிவிப்பு

கருணாநிதிக்கு உரிய சிகிச்சை வழங்காமல் 2 ஆண்டுகள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தப் போவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திடீரென அறிவித்துள்ளார். Read More