முரசொலி அலுவலகத்தில் கருணாநிதி சிலை - மம்தா பானர்ஜி திறந்து வைக்கிறார்

WB CM Mamata Banerjee unveils Karunanidhis statue in murasoli office 7th August

by Nagaraj, Jun 26, 2019, 15:35 PM IST

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை, சென்னையில் உள்ள முரசொலி அலுவலகத்தில் அமைக்கப்படுகிறது. இதனை கருணாநிதியின் முதலாவது நினைவு தினமான ஆகஸ்ட் 7-ந் தேதி மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் பொது வாழ்வில் 75 ஆண்டு காலத்திற்கும் மேலாக புகழ் பெற்று திகழ்ந்தவர் மு.கருணாநிதி . திமுக தலைவராக 50 ஆண்டுகள் பொறுப்பில் இருந்த கருணாநிதி, தமிழகத்தின் முதல்வராக 5 முறை பொறுப்பு வகித்தவர். பன்முகத் தன்மை படைத்த மாபெரும் திமுக தலைவராக திகழ்ந்த கருணாநிதி கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 7-ந் தேதி மறைந்தார். 


கருணாநிதியின் முதலாவது நினைவு நாளான ஆகஸ்ட் 7-ந் தேதி அவரது முழு உருவச்சிலை, முரசொலி நாளிதழ் அலுவலக வளாகத்தில் திறக்கப்பட உள்ளது.மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விழாவில் பங்கேற்று கருணாநிதி சிலையை திறந்து வைக்கிறார்.சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இத்தகவலை தெரிவித்துள்ளார்.

ஜூன் 3 ; உடன்பிறப்பே... எழுந்து வா உடன்பிறப்பே.. கலைஞர் இல்லா முதல் பிறந்தநாள் விழா

You'r reading முரசொலி அலுவலகத்தில் கருணாநிதி சிலை - மம்தா பானர்ஜி திறந்து வைக்கிறார் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை