இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் மரணம்..

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தா.பாண்டியன், இன்று காலை சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 89.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியனுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொரோனா தொற்று பாதித்தது. Read More


மருத்துவமனை லிப்ட் திடீரென விழுந்தது.. முன்னாள் முதல்வர் கமல்நாத் தப்பினார்..

இந்தூர் மருத்துவமனை ஒன்றில் லிப்ட் திடீரென 10 அடிக்கு டமார் என விழுந்தது. இதில் பயணம் செய்த முன்னாள் முதல்வர் கமல்நாத் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் உயிர் தப்பினர்.மத்தியப் பிரதேச மாநிலத்தில் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்த போது அமைச்சராக இருந்தவர் ராமேஸ்வர் படேல். Read More


பாஜக பெண் தலைவர் கொகைன் போதைப் பொருளுடன் கைது

கொல்கத்தாவில் பாஜகவின் இளைஞர் அமைப்பான யுவ மோர்ச்சா பெண் தலைவர் பமீலா கோஸ்வாமியை 100 கிராம் கொகைன் போதைப் பொருளுடன் போலீசார் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மேற்கு வங்க மாநில பாஜக இளைஞர் அமைப்பான யுவ மோர்ச்சா மாநில செயலாளராக இருப்பவர் பமீலா கோஸ்வாமி. Read More


விவசாயிகளின் மரணத்திற்கு பாஜக அனுதாபம் தெரிவிக்கவில்லை.. ராகுல்காந்தி பேச்சு..

விவசாயிகளின் மரணத்திற்கு நாடாளுமன்றத்தில் ஒரு பாஜக எம்.பி. கூட அனுதாபம் தெரிவிக்கவில்லை என்று ராகுல்காந்தி வசைபாடியுள்ளார்.மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களால் தங்களுக்கு பாதிப்பு என்று அவற்றை வாபஸ் பெறக் கோரி, டெல்லியில் விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாகப் போராடி வருகின்றனர். Read More


மியான்மர் ராணுவத் தளபதிகள் மீது அமெரிக்கா பொருளாதார தடை..

மியான்மர் நாட்டில் ஜனநாயக அரசை பதவியேற்க விடாமல் ராணுவ நெருக்கடியை கொண்டு வந்துள்ளதைக் கண்டித்து, அந்நாட்டு ராணுவத் தளபதிகள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.மியான்மர் நாட்டில் நீண்ட காலமாக ராணுவம்தான் ஆட்சியைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. Read More


விவசாயிகளை தடுக்க திக்ரி, காசிப்பூர் எல்லைகளில் இரும்புக் கம்பி தடுப்புகள்.. சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு..

டெல்லிக்குள் விவசாயிகள் நுழையாமல் தடுப்பதற்காக திக்ரி மற்றும் காசிப்பூர் எல்லைகளில் இரும்பு கம்பிகளைக் கொண்டு பெரும் தடுப்புகளை போலீசார் வைத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது Read More


செங்கோட்டை மீது தாக்குதல்.. 20 விவசாயச் சங்கத் தலைவர்களுக்கு லுக்அவுட் நோட்டீஸ்.. பாஸ்போர்ட் பறிமுதல்..

செங்கோட்டை மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக 20 விவசாயச் சங்கத் தலைவர்களுக்கு லுக்அவுட் நோட்டீஸ் அனுப்ப மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. Read More


கேரளாவிலும் ஒரு குஜராத் பாஜக தலைவரின் பேச்சுக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கடும் எதிர்ப்பு

திருவனந்தபுரத்தில் உள்ள நேமம் சட்டமன்ற தொகுதி கேரளாவில் உள்ள ஒரு குஜராத் என்று பாஜக தலைவர் கும்மனம் ராஜசேகரன் கூறியதற்கு காங்கிரஸ், முஸ்லிம் லீக் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. Read More


விவசாயி சங்கத் தலைவர்கள் 4 பேரை சுட்டுக் கொல்ல சதி.. மர்மநபரை வளைத்த விவசாயிகள்..

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் இன்று(ஜன.23) 59வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். Read More


டெல்லி விவசாயிகள் சங்கத்தினருடன் மத்திய அரசு 11வது கட்ட பேச்சுவார்த்தை

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு 11வது கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.மத்திய அரசு அமல்படுத்திய மூன்று புதிய வேளாண் சட்டத் திருத்த மசோதாவை ரத்து செய்யக் கோரி டெல்லியில் விவசாயிகள் சங்கத்தினர் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர். Read More