ரசிகர்கள் அனைவரும் சினிமா பார்ப்பதற்கு தியேட்டர்களுக்கு வரவேண்டும். நலிந்து கொண்டிருக்கும் இந்த தொழிலை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் என்று பிரபல மலையாள நடிகர் மோகன்லால் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
கொச்சியில் உள்ள நடிகர் மம்மூட்டியின் வீட்டுக்கு மோகன்லால் விருந்து சென்றார். இருவரும் இணைந்து எடுத்த புகைப்படங்கள் சமூக இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.தமிழ் சினிமாவில் கமலும், ரஜினியும் போல மலையாள சினிமாவில் மம்மூட்டியும், மோகன்லாலும் சூப்பர் நடிகர்களாக உள்ளனர்.
தற்போதைய சூழ்நிலையில் நடிகர் விஜய் தன்னுடைய மாஸ்டர் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடாமல் தியேட்டர்களில் வெளியிட முடிவெடுத்துள்ளார். அவரைப் போல மோகன்லாலும் நடந்து கொள்ள வேண்டும் என்று பிரபல மலையாள சினிமா தயாரிப்பாளர் லிபர்ட்டி பஷீர் கூறியுள்ளார்.
மோகன்லால், மீனா நடிப்பில் உருவாகியுள்ள திரிஷ்யம் 2 அமேசான் பிரைமில் வெளியாகிறது. இந்தப் படத்திற்கான டீசரை புத்தாண்டு இரவில் மோகன்லால் தன்னுடைய சமூக இணையதள பக்கத்தில் வெளியிட்டார்.
இந்தியாவிலேயே மிக இளம் வயது மேயர் என்ற பெருமையுடன் 21 வயதான திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஆர்யா இன்று மேயராக தேர்வு செய்யப்படுகிறார். காலை 11 மணிக்கு மேயர் தேர்தல் நடைபெறுகிறது.கேரளாவில் சமீபத்தில் மூன்று கட்டங்களாக நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி பெருவாரியான வார்டுகளில் வெற்றி பெற்றது.
இந்தியாவிலேயே வயது குறைந்த மேயர் என்ற சாதனை படைத்த திருவனந்தபுரத்தை சேர்ந்த ஆர்யா ராஜேந்திரனை பிரபல நடிகர் மோகன்லால் போனில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.கேரளாவில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி அதிக வார்டுகளில் வெற்றி பெற்றது. கேரளாவில் மொத்தம் 6 மாநகராட்சிகள் உள்ளன.
மெகா ஸ்டார் சிரஞ்சீவியை இயக்க உள்ளார் கோலிவுட் பட இயக்குனர். இப்படம் ஒரு மலையாள ரீமேக் ஆகும். மலையாள நடிகர் மோகன்லால் நடித்த படம் லுசிஃபெர்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் அடுத்த சீசனில் மேலும் ஒரு அணியைச் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த அணியைப் பிரபல மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் வாங்கத் திட்டமிட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.
துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப் போட்டியை பார்ப்பதற்காக மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் சென்றார். அவருக்கு ஸ்டேடியத்தில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
திரிஷ்யம் 2 படப்பிடிப்பின் இடைவேளையில் நடிகர் மோகன்லாலுடன் சமூக அகலத்தைக் கடைப்பிடித்து நடிகை மீனா எடுத்து வெளியிட்ட போட்டோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.தற்போது வேகமாகப் பரவி வரும் கொரோனா நோயைக் கட்டுப்படுத்த முக்கியமான வழிகளில் ஒன்று சமூக அகலம்.