மோகன்லால்- மீனா 2ம் பாக பட ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. தமிழ் ரீமேக்கில் மீண்டும் கமல் நடிப்பாரா..

by Chandru, Feb 5, 2021, 20:04 PM IST

மோகன்லால் மீனா மலையாளத்தில் நடித்த படம் த்ரிஷ்யாம். ஜீத்து ஜோசப் இயக்கினார். இப்படம் வெளியாகி வெற்றி பெற்றதையடுத்து அதை தமிழில் ரீமேக் செய்ய முடிவானது. யாரும், எதிர்பாராத வகையில் இதில் கமல்ஹாசன் நடித்தார். பாபநாசம் என்ற பெயரில் உருவான இப்படத்தை மலையாளத்தில் த்ரிஷ்யம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப்பே தமிழிலும் இயக்கினார். இதில் மீனா பாத்திரத்தை கவுதமி ஏற்று நடித்தார். இப்படமும் திரைக்கு வந்து பெரிய வெற்றி பெற்றது. தற்போது மலையாளத்தில் த்ரிஷ்யம் 2ம் பாகம் உருவாகிறது. இதில் மீண்டும் மோகன்லால், மீனா நடிக்கின்றனர். ஜீத்து ஜோசப் இயக்குகிறார்.

அமேசான் ப்ரைம் வீடியோ மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் 2 படத்தின் முதல் போஸ்டரை வெளியிடுவதுடன் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு தேதியையும் அறிவிக்கிறது. மோகன்லால் நாயகனாக நடிக்கும் மலையாள த்ரில்லர் திரைப்படமான த்ரிஷ்யம் 2 படத்தின் முதல் போஸ்டரை அமேசான் ப்ரைம் வீடியோ இன்று வெளியிட்டுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் வரும் பிப்.8, 2021 அன்று வெளியாகிறது. அதிகம் எதிர்பார்க்கப்படும் மலையாள த்ரில்லர் திரைப்படமான த்ரிஷ்யம் 2 படத்தை ஜீது ஜோசப் எழுதி இயக்கியுள்ளார். இதை ஆஷிர்வாத் சினிமாஸ் சார்பில் அந்தோணி பெரம்பவூர் தயாரித்துள்ளார்.

இப்படத்தில் மீனா, சித்திக், ஆஷா ஷரத், முரளி கோபி, அன்சிபா, எஸ்தர் மற்றும் சாய்குமார் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். போஸ்டரில் மோகன்லால் (எ) ஜார்ஜ்குட்டி ஒரு சஞ்சலமான மனநிலையில் பதற்றமாக இருக்கிறார். இது படத்தின் தொனியை மறைமுகமாக விவரிக்கிறது. த்ரிஷ்யம் முதல் பாகத்தில் கமல்ஹாசன் நடித்தார். தற்போது உருவாகும் இரண்டாம் பாகம் வெளியாகி வெற்றி பெற்றால் தமிழிலும் ரிமேக் ஆகும். அதில் கமல்ஹாசன் நடிக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கும் இந்தியன் 2ம் பாகம் தவிர லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற படத்தில் நடிக்கிறார். இதற்கிடையில் தமிழக சட்டமன்ற தேர்தல் பணியிலும் ஈடுபட்டு பிரசாரம் மேற்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading மோகன்லால்- மீனா 2ம் பாக பட ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. தமிழ் ரீமேக்கில் மீண்டும் கமல் நடிப்பாரா.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை