சபரிமலையில் மகரஜோதியை தரிசிப்பதற்காக 25க்கும் மேற்பட்ட பக்தர்களிடம் இருந்து ஆயிரக்கணக்கில் பணம் வாங்கி அவர்களை யாருக்கும் தெரியாமல் கழிப்பறையில் பூட்டி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாகச் சபரிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த வருடம் ₹ 300 கோடிக்கு மேல் வருமானம் கிடைத்தது. ஆனால் இந்த வருடம் இதுவரை ₹ 15 கோடி மட்டுமே வருமானம் கிடைத்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை பிரசித்தி பெற்ற மகர விளக்கு பூஜை நடைபெறுகிறது. மாலையில் மகர ஜோதி தரிசனம் நடக்கிறது.
ஜனவரி 14ம் தேதி மகர ஜோதி தரிசனத்திற்காக பக்தர்கள் யாரும் சபரிமலையில் தங்க அனுமதிக்கக் கூடாது என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் தற்போது மகரவிளக்கு கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் 8ம் தேதி முதல் 19ம் தேதி வரை தரிசனம் செய்ய விரும்புவர்கள் நாளை 6ம் தேதி முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
சபரிமலையில் 3 பூசாரிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மேல்சாந்தி என அழைக்கப்படும் தலைமை பூசாரி சுயதனிமைக்கு சென்றார். இதனால் அவருக்குப் பதிலாகத் தந்திரி கண்டரரு ராஜீவரரு நடை திறந்து பூஜைகளை நடத்தினார்.
மகர விளக்கு பூஜைக்காகச் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை (30ம் தேதி) மாலை திறக்கப்படுகிறது. நாளை மறுநாள் 31 முதல் ஜனவரி 19ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். அன்று முதல் ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தி நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்குச் செல்ல முடியும்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெற்றது. இன்று இரவு 9 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது. இன்றுடன் இவ்வருட மண்டலக் காலம் நிறைவடைகிறது. மீண்டும் மகரவிளக்கு பூஜைகளுக்காக வரும் 30ம் தேதி மாலை நடை திறக்கப்படும்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நாளை நடைபெறுகிறது. இதையொட்டி இன்று மாலை ஐயப்ப விக்ரகத்தில் தங்க அங்கி அணிவித்து தீபாராதனை நடைபெறும். நாளையுடன் இவ்வருட மண்டலக் காலம் நிறைவடைகிறது.சபரிமலை ஐயப்பன் கோவிலில் இவ்வருட மண்டலக் கால பூஜைகளுக்காக நவம்பர் 15ம் தேதி நடை திறக்கப்பட்டது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் தினமும் 5,000 பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்ற கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளது. கொரோனா பரவல் அதிகமாகி வருவதால் பக்தர்கள் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்று கேரள அரசு கூறியுள்ளது.