திகில் கிளப்பும் காட்சிகள்... திக் திக் நயன்தாரா.... - வெளியானது கொலையுதிர்காலம் டிரெய்லர்!

nayantharas Kolaiyuthir Kaalam Movie Trailer released

நயன்தாராவின் ‘கொலையுதிர்காலம்‘ டிரெய்லர் வெளியாகியுள்ளது.

'உன்னைப்போல் ஒருவன்', 'பில்லா 2' படங்களை இயக்கிய சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் ‘கொலையுதிர் காலம்’ படம் 2019 ஜனவரி மாதம் நயன்தாராவின் பிறந்தநாளன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தில் நடிகை பூமிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை பூஜா என்டெர்டெயின்மென்டுடன் இணைந்து, எக்ஸெட்ரா என்டெர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பொங்கலுக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பேட்ட விஸ்வாசம் படங்களின் ரிலீசால் தள்ளிப்போனது. இந்தநிலையில் இந்தப் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. த்ரில்லர் களத்தில் படமாக்கப்பட்டிருக்கும் ‘கொலையுதிர்காலம்‘ டிரெய்லர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. திகில் கிளப்பும் காட்சிகள் நிறைந்த திரில்லர் படமாக உருவாகியுள்ளது இதன் டிரெய்லர் வரவேற்பை பெற்று வருகிறது.

You'r reading திகில் கிளப்பும் காட்சிகள்... திக் திக் நயன்தாரா.... - வெளியானது கொலையுதிர்காலம் டிரெய்லர்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா...? நம்பித்தான் ஆக வேண்டும்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்