மலையாள சூப்பர் ஸ்டாருடன் சூர்யா..!- இது #SURIYA37

நடிகர் சூர்யா தனது 37-வது படத்தை மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் உடன் இணைந்து நடிக்கவுள்ளார்.

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படத்தை வெற்றியுடன் நிறைவு செய்த சூர்யா, தற்போது செல்வராகவன் இயக்கத்தில் பிஸியாக உள்ளார்.

செல்வராகவன் இயக்கத்தில் ’என்.ஜி.கே’ திரைப்படத்தில் தற்போது சூர்யா நடித்து வருகிறார். சூட்டிங் நடந்து வரும் நிலையில் இத்திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகைகள் சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடித்து வருகின்றனர் என்பது கூடுதல் தகவல்.

இந்நிலையில், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க சூர்யா ஒப்பந்தமாகியுள்ளார். இன்னும் பெயர் சூட்டாத நிலையில், லைகா ப்ரொடக்‌ஷன் தயாரிப்பில் உருவாகும் இப்படம் #SURIYA_37 என அழைக்கப்படுகிறது.

லைகா நிறுவனம், தற்போது சூர்யா படத்தில் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கே.வி.ஆனந்த்- சூர்யா கூட்டணியில் இது மூன்றாவது படம். முதலில் அயன் வெற்றி பெற்றாலும் இரண்டாவது படமான ‘மாற்றான்’ சொதப்பியது. 

மீண்டும் இக்கூட்டணி வெற்றி அளிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading மலையாள சூப்பர் ஸ்டாருடன் சூர்யா..!- இது #SURIYA37 Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இந்தியாவுக்கு விளையாடுவாரா மாட்டாரா?- குழப்பத்தை ஏற்படுத்திய கோலி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்