படிப்பில் கவனம் செலுத்துமாறு கண்டித்ததால் தற்கொலைக்கு முயன்ற சிறுவன்

The boy who tried to commit suicide because he condemned the study

நாமக்கல்லில் படிப்பில் கவனம் செலுத்தும்படி பாட்டி கண்டித்ததால், மலைக்கோட்டையில் ஏறி தற்கொலைக்கு முயன்ற சிறுவனை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

நாமக்கல் எஸ்.பி.ஐ பேங்க் காலணியில் தனது பாட்டி வீட்டில் வசித்து வருகிறான் 15 வயது சிறுவன், அவனது பெற்றோர் இறந்து விட்டதால் அவனது பாட்டி மலர்கொடி அவனை வளர்த்து வருகிறார். அந்த சிறுவன் தற்போது 9ம் வகுப்பை முடித்து விட்டான். தற்போது விடுமுறை என்பதால் ஜாலியாக நண்பர்களுடன் பொழுதை கழித்து வந்துள்ளான்.

அடுத்த வருடம் 10ம் வகுப்பு செல்வதால் படிப்பில் கவனம் செலுத்தும்படி பேரனிடம் கொஞ்சம் கண்டிப்பாக பாட்டி மலர்கொடி கூறினாள். இது சிறுவனுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. உடனே மலைக்கோட்டைக்கு சென்று தற்கொலை செய்ய முடிவு செய்து அங்கு சென்றான். மலைக்கோட்டையின் பக்கவாட்டு பகுதிக்கு சென்று, அங்கிருந்து கீழே பார்த்த போது அவனுக்கு பயம் ஏற்பட்டுள்ளது. அதனால் தற்கொலை முடிவை கைவிட்டு விட்டான்.

ஆனால் மலைக்கோட்டையிலிருந்து எப்படி கீழே இறங்குவது என்று தெரியாமால் தவித்தான். மலைக்கோட்டை உச்சியில் ஒரு சிறுவன் நிற்பதை பார்த்த சிலர் அது தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் அங்கு வந்த தீயணைத்து துறையினர் கயிறு மூலம் மலைக்கோட்டை உச்சிக்கு சென்று ஒரு மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு சிறுவனை பத்திரமாக மீட்டனர்.

ஏப்.,24ல் விசாரணை...இல்லையெனில்,‘டிக்-டாக்’ செயலிக்கு தடை இல்லை! - உச்ச நீதிமன்றம்

You'r reading படிப்பில் கவனம் செலுத்துமாறு கண்டித்ததால் தற்கொலைக்கு முயன்ற சிறுவன் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தாராபுரத்தில் ஓட்டுக்கு பணம் கொடுத்த சித்தாப்பாவை தாக்கிய அண்ணன் மகன்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்