பஸ்சில் நகையை அபேஸ் செய்ய முயன்ற 4 பெண்களுக்கு பொதுமக்கள் தர்மஅடி

4 women arrest for who tried to theft jewels in the bus at kovai

கோவையில் பேருந்தில் பயணித்த பெண்களிடம் நகைபறிப்பில் ஈடுபட முயற்சித்த 4 பெண்களுக்கு பயணிகள் தர்மஅடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கோவை, டவுன்ஹால் அடுத்த வைஸ்யால் வீதி பகுதியில் தனியார் நகரப் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. பேருந்துக்குள் 2 பெண்கள் நகை பறிப்பில் ஈடுபட முயற்சித்ததால் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது, அந்த 2 பெண்களோடு, மேலும் 2 பெண்கள் குழந்தைகளுடன் பேருந்திலிருந்து குதித்துள்ளனர்.

செம்பட்டி காலனியில் நுழைந்து தப்பியோட முயற்சித்த 4 பெண்களையும் பிடித்து தர்மஅடி கொடுத்த பயணிகள், அவர்களை கடைவீதி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் தொடர் வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

4 பெண்களும் கோவை மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அங்கிருந்து தப்பிக்கும் நோக்கில் அந்த பெண்கள் காவல் நிலையத்திலேயே இயற்கை உபாதைகளை கழித்தனர். இது போலீசாருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.

தமிழகம் முழுவதும் உஷார்! போலீசுக்கு அரசு எச்சரிக்கை!!

You'r reading பஸ்சில் நகையை அபேஸ் செய்ய முயன்ற 4 பெண்களுக்கு பொதுமக்கள் தர்மஅடி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த மாணவன் கைது

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்