சூதாட்டத்தில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரி உள்பட 8 பேர் கைது

8 people including a police officer were arrested for gambling

சென்னையில் சட்ட விரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை சூளை பகுதியில் ரமேஷ் என்பவரின் வீட்டில் சட்டவிரோதமாக சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து வேப்பேரி போலீசார் அங்கு சோதனை நடத்தினர். அப்போது அங்கு சூதாடிக்கொண்டிருந்த 8 பேரை கையும் களவுமாக கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.20 ஆயிரம் ரொக்கம் மற்றும் சீட்டுக்கட்டுகளை பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அதில் போலீசாருக்கு அதிர்ச்சி அளிக்கும் தகவல் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட 8 பேர்களில் முருகேசன் என்பவர் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருவதும், ஆல்பர்ட் என்பவர் ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் என்பதும் தெரிய வந்தது. அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவர்கள் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சூதாட்டத்தை தடுக்க வேண்டிய காவல்துறை அதிகாரியே சூதாட்டத்தில் ஈடுபட்டு இருப்பது காவல் துறைக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.

பொன்னமராவதி கலவரம் விவகாரம்: அவதூறு ஆடியோ வெளியிட்ட நபர்கள் அதிரடி கைது

You'r reading சூதாட்டத்தில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரி உள்பட 8 பேர் கைது Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பஸ்சில் நகையை அபேஸ் செய்ய முயன்ற 4 பெண்களுக்கு பொதுமக்கள் தர்மஅடி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்