மழையில் ஆட்டம் போடும் குட்டீஸூக்கு என்ன கொடுக்கலாம்?

Monsoon food for kids

மழை வந்துவிட்டாலே குட்டிப் பிள்ளைகளுக்கு கொண்டாட்டம்தான்! படகு விடுவது, கைக்கொட்டியபடி நனைவது என்று ஒரே உற்சாகம்தான்! பெற்றோருக்குத் தான், பிள்ளைகளுக்கு காய்ச்சல், சளி என்று தொல்லைகள் வந்துவிடக்கூடாதே என்று பெருங்கவலை.

வைட்டமின் டி சத்து குறைந்தால் நோய் எதிர்ப்பு ஆற்றலும் குறையுமாம். ஆகவே மழைக்காலத்தில் வைட்டமின் டி சத்து அடங்கிய உணவு பொருள்களை சாப்பிடக் கொடுத்தால் பிள்ளைகளுக்கு நோய் வராமல் காத்துக்கொள்ளலாம்.

பூசணி பால் சூப்:

மழை பருவத்தில் இரவு உணவுக்கு முன்பு குழந்தைகளுக்குக் கொடுக்கக்கூடிய சூப் இது. இரண்டு மேசைக்கரண்டி வெண்ணெயை வாணலியில் நன்கு சூடுபடுத்தவும். நறுக்கிய வெங்காயத்தை கால் கோப்பை அளவு எடுத்து அதில் சில நிமிடங்கள் வதக்கவும். பின்பு பூசணி துண்டுகள் ஒரு கோப்பை அளவு எடுத்து அதனுடன் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும். பின்பு மூன்று கோப்பை நீர், தேவையான அளவு உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து, பூசணி துண்டுகள் வேகும் வரை சூடுபடுத்தவும். பின்னர் வாணலியை இறக்கி 10 நிமிடங்கள் ஆற விடவும். இதை மிக்ஸியில் போட்டு அரைக்கவும். அதனுடன் ½ கோப்பை அளவு பால் சேர்த்து கொதிக்கவிடவும். அழகுக்காக மேலே வெங்காய தாள் பரப்பி பரிமாறலாம்.

முட்டை ஃப்ராங்கி:

மதிய உணவுக்கு பிள்ளைகளுக்கு கொடுத்து அனுப்ப ஏற்ற உணவு இது. கோதுமையை அரைத்து எடுத்த மாவு ஒரு கோப்பை அளவு எடுத்து நன்றாக பிசையவும். தனி பாத்திரத்தில் இரண்டு முட்டைகளுடன் நறுக்கிய வெங்காயம் மற்றும் கொத்துமல்லி தழைகளை சேர்த்து நன்கு அடிக்கவும்.

வெங்காயம், குடமிளகாய், காரட் ஆகியவற்றை சீவி தனியே வைத்துக்கொள்ளவும். பிசைந்த மாவை கொண்டு பராத்தா செய்யவும். அதனுடன் அடித்து வைத்த முட்டையை இருபக்கமும் ஊற்றி வேக விடவும். நன்கு வெந்ததும் சீவி வைக்கப்பட்ட வெங்காயம், குடமிளகாய், காரட் ஆகியவற்றை நடுவில் வைத்து சுருட்டவும். புதினா சட்னி சேர்த்து உண்ண ருசியாக இருக்கும்.

கோல்டன் மில்க் ஸூமூத்தி:

காலையில் குட்டீஸூக்கு கொடுப்பதற்கு ஏற்றது. தோலை உறித்து, துண்டாக்கி, காற்றுப் புகாத பை அல்லது பாத்திரத்தில் உறைபெட்டிக்குள் (ஃப்ரீசர்) வைக்கப்பட்ட வாழைப்பழம் ஒன்றுடன் ½ தேக்கரண்டி மஞ்சள் தூள், ½ தேக்கரண்டி அளவு தேன், ⅛ தேக்கரண்டி பட்டை இவற்றுடன் அரை கோப்பையளவு பால் சேர்த்து மிக்ஸியில் அடித்து பரிமாறவும்.

Links:-

இப்படி செய்தால் போதும்; கொலஸ்ட்ரால் குறைஞ்சுபோகும்!

You'r reading மழையில் ஆட்டம் போடும் குட்டீஸூக்கு என்ன கொடுக்கலாம்? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மருமகன் ரதுல் கைது; கமல்நாத் கண்டனம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்