பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான போராட்டம் நடத்திய ஊழியர்களை பழிவாங்கும் கூகுள்?

Google to take revenge on employees involved in sexual assault charges protest

கூகுள் நிறுவனத்தில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய ஊழியர்களை பழிவாங்கும் நடவடிக்கையில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது.

கூகுள் நிறுவனத்தில் நடக்கும் பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சரியான நடவடிக்கை எடுக்காததை கண்டித்து உலகம் முழுவதிலும் இருந்து அந்நிறுவனத்தை சேர்ந்த 20,000 ஊழியர்கள் 2018 நவம்பர் மாதம் வெளிநடப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை ஒருவழியாக கூகுள் நிறுவனம் சமாளித்தது.

இந்நிலையில் அந்த போராட்டத்தை வழிநடத்தியவர்களை பழிவாங்கும் வகையில் கூகுள் நிறுவனம் நடவடிக்கைகள் எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த போராட்டத்தை வழிநடத்திய கூகுளின் ஆய்வு தலைவர் மெரேடித் விட்டேக்கர் மற்றும் யூ டியூப் மார்கெட்டிங் மேலாளர் க்ளைரே ஸ்டாப்பில்டன் ஆகியோரின் பணிகளில் அந்த போராட்டத்திற்கு பிறகு பெரிய மாற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர்கள் பதிவியிறக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஏப்.,24ல் விசாரணை...இல்லையெனில்,‘டிக்-டாக்’ செயலிக்கு தடை இல்லை! - உச்ச நீதிமன்றம்

You'r reading பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான போராட்டம் நடத்திய ஊழியர்களை பழிவாங்கும் கூகுள்? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மோடியை கிண்டல் செய்த குஷ்பு...! ட்ரோல் செய்பவர்களுக்காக படம் வெளியிட்டுக் கலக்கல்...

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்