மிஸ் இந்தியா வென்ற நடிகையை நள்ளிரவில் துரத்திய கும்பல் கைது

Had To Stand Up For Uber Driver: Ex-Miss India Model On Midnight Horror In Kolkata

முன்னாள் மிஸ் இந்தியாவும், நடிகையுமான உஷோசி சென்குப்தா காரை நள்ளிரவில் மோட்டார் பைக்குகளில் துரத்திச் சென்று, டிரைவரை தாக்கிய 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவைச் சேர்ந்த பிரபல மாடலிங் நடிகையான உஷோசி சென்குப்தா கடந்்த 2010ம் ஆண்டில் மிஸ் இந்தியா அழகியாக தேர்வு செய்யபட்டவர். கொல்கத்தாவில் வசிக்கும் இவர் கடந்த ஞாயிறன்று பைவ் ஸ்டார் ஓட்டலில் டின்னரை முடித்து கொண்டு தனது நண்பருடன் உபேர் டாக்ஸியில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது நான்கு மோட்டார் பைக்குகளில் வந்த இளைஞர்கள் அந்த காரை துரத்தினர். மேலும், காரை இடிப்பது போல் சாகசம் செய்திருக்கிறார்கள். உடனே உபேர் டாக்ஸி டிரைவர் வேகமாக காரை செலுத்தியிருக்கிறார். இதையடுத்து, அந்த காரை விரட்டிச் சென்று நிறுத்தினர்.

பின்பு, கார் டிரைவரை கீழே இழுத்து போட்டு அடித்து உதைத்தனர். உடனே நடிகை சென்குப்தா காரை விட்டு இறங்கி அந்த இளைஞர்கள் அடிப்பதை வீடிேயா எடுத்துள்ளார்.

மேலும், அங்கிருந்து கூச்சலிட்டபடி அந்த சாைலயில் செல்வோரை உதவிக்கு அழைத்துள்ளார். அப்போது சில போலீசார் வந்துள்ளனர். ஆனால், அவர்கள் சம்பவம் நடைபெறும் இடம் தங்கள் எல்லைக்குள் வராது என்று கூறி, வேறொரு காவல் நிலையத்திற்கு செல்லுமாறு நடிகையிடம் கூறியிருக்கிறார்கள். பின்னர், அவர்களிடம் கெஞ்சிக் கூத்தாடி, அந்த டிரைவரை இளைஞர்களிடம் காப்பாற்றியுள்ளார்.

இந்த சம்பவம் நடக்கும் போது இரவு 11.40 மணி. நடிகை சென்குப்தா தான் எடுத்த வீடியோவை முகநூல் பக்கத்தில் போட்டு, சம்பவத்தை விவரித்திருக்கிறார். போலீசார் எல்லைப் பிரச்னையை கூறியதையும், அவர்கள் உதவிக்கு வராவிட்டால் டிரைவர் உயிரிழந்திருப்பார் என்றும் கூறியிருந்தார். இது சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து, காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரிக்கத் தொடங்கினர். பின்னர், சென்குப்தாவும் காவல் நிலையத்தில் புகாரும் கொடுத்தார்.

இதைத் தொடர்ந்து, அந்த பைக்குகளில் விரட்டியவர்கள் யார் என்று கண்டுபிடிக்கப்பட்டு ஏழு பேரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பலான வேலைக்கு மறுத்த ‘பப்’ டான்சருக்கு அடி உதை; 4 பெண்கள் கைது, ஒருவர் ஓட்டம்

You'r reading மிஸ் இந்தியா வென்ற நடிகையை நள்ளிரவில் துரத்திய கும்பல் கைது Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தமிழகத்தின் புதிய டிஜிபி யார்?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்