நிதி ஆயோக் ஊழியருக்கு கொரோனா.. அலுவலகத்திற்குச் சீல்..

Niti Aayog office sealed after employee tests Covid-19 positive.

டெல்லியில் நிதி ஆயோக் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நிதி ஆயோக் அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. நாடு முழுவதும் சுமார் 30 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் நோய் பரவியிருக்கிறது. இதனால், நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்லியில் நிதி ஆயோக் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று பாதித்திருப்பது நேற்று கண்டறியப்பட்டது.

இதையடுத்து, நிதி ஆயோக் அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து, அலுவலகத்தைப் பூட்டி சீல் வைத்தனர்.ஏற்கனவே விமானப் போக்குவரத்து அமைச்சக ஊழியர் ஒருவருக்குக் கடந்த வாரம் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் அந்த அமைச்சக அலுவலகம் அமைந்துள்ள ராஜீவ்காந்தி பவன் மூடி சீல் வைக்கப்பட்டது. அந்த துறை மத்திய அமைச்சர் ஹர்தீப் புரி வேறு அலுவலகங்களில்(நிர்மான் பவன், உத்யோக் பவன்) அமர்ந்து பணியாற்றி வந்தார். இந்நிலையில், இன்று ராஜீவ்காந்தி பவன் திறக்கப்பட்டது. விமான போக்குவரத்து அமைச்சகம் குறைந்த ஊழியர்களுடன் செயல்படத் தொடங்கியது.

You'r reading நிதி ஆயோக் ஊழியருக்கு கொரோனா.. அலுவலகத்திற்குச் சீல்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - காதலனை அறிமுகம் செய்து வைத்த பிரபல நடிகை..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்