கொரோனாவுக்கு நாடு முழுவதும் 7745 பேர் பலி..

India reports 2.76 lakh Covid-19 cases, death toll now at 7,745.

நாடு முழுவதும் கொரோனாவால் 7745 பேர் பலியாகியுள்ளனர். இது வரை 2.76 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 9985 பேருக்கு கொரோனா பாதிப்பு தெரிந்தது. இதையடுத்து, நாட்டில் இது வரை 2 லட்சத்து 76,583 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இதில் ஒரு லட்சத்து 35,206 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது ஒரு லட்சத்து 33,632 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


நாடு முழுவதும் நேற்று மட்டுமே 279 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, கொரோனா பலி எண்ணிக்கை 7745 ஆக அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிராவில் நேற்று 2259 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. அங்கு மொத்தத்தில் 90,787 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இதில் 42,368 பேர் குணம் அடைந்துள்ளனர். 3289 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் 34,914 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 307 பேர் பலியாகியுள்ளனர். இவற்றுக்கு அடுத்து டெல்லி, குஜராத், ம.பி. மாநிலங்களில் கொரோனா அதிகமாகப் பரவியிருக்கிறது.

You'r reading கொரோனாவுக்கு நாடு முழுவதும் 7745 பேர் பலி.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஜெயம் ரவி படத்தில் சிறுவயதிலேயே ரவுடி பேபியின் அறிமுகம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்