வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் உதவித் தொகை- ஆந்திர அரசு

வேலையில்லா பட்டதாரிகளுக்கு உதவித் தொகை

ஆந்திர மாநிலத்தில், வேலையில்லா இளைஞர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று தொடங்கி வைக்கிறார்.

2014- தேர்தல் வாக்குறுதியில், வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும் என்று தெலுங்கு தேசம் கட்சி உறுதி அளித்திருந்தது.

‘முக்கிய மந்திரி யுவ நெஸ்தம்’ என்ற இந்த திட்டத்தை அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அமராவதியில் இன்று தொடங்கி வைக்கிறார்.

இந்த திட்டத்தின் மூலம், வேலையில்லா இளைஞர்களுக்கு 1000 ரூபாய் உதவித் தொகை அளிக்கப்படும். மாநிலத்தில் உள்ள 12 லட்சம் இளைஞர்கள் இதனால், பலனடைவார்கள் என்று கூறப்படுகின்றது.

இதற்கு, ஓர் ஆண்டில் 1,200 கோடி ரூபாய் செலவாகும் என்றும், இந்த உதவித்தொகை ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் இளைஞர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும், வேலையில்லா இளைஞர்களுக்கு தகுந்த வேலை கிடைக்கும்வரை இந்த உதவித்தொகை வழங்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

You'r reading வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் உதவித் தொகை- ஆந்திர அரசு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - யோகாசனங்கள்:மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு சஸ்சாங்காசனம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்