சென்னை மெட்ரோ ரயில் அதிகாலை முதல் இயக்கம்

CMRL extends train timings

சென்னை மெட்ரோ ரயில் அதிகாலை முதல் இயக்கப்படுகிறது. மார்ச் 30ம் தேதி சனிக்கிழமை முதல் அதிகாலை சேவை ஆரம்பமாகியுள்ளது. தென்னக ரயில்வேயின் மின்சார ரயில்கள் சென்னை மற்றும் புறநகர்களில் அதிகாலை முதல் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது மெட்ரோ ரயிலும் தன் சேவையை அதிகாலை முதல் தொடங்கியுள்ளது.
திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை மட்டும் அதிகாலை 4:30 மணிக்கு மெட்ரோ ரயில் சேவை ஆரம்பிக்கும். ஞாயிற்றுக்கிழமை இப்போது இருப்பதுபோல் காலை 7:58 மணிக்குதான் முதல் ரயில் புறப்படும். ஞாயிறன்று கடைசி ரயில் இரவு 10 மணிக்குப் புறப்படும்.
 
விமானநிலையம் (ஏர்போர்ட்) மெட்ரோ, வண்ணாரப்பேட்டை (வாஷர்மென்பேட்) மெட்ரோ, பரங்கிமலை (செயின்ட் தாமஸ் மவுண்ட்) மெட்ரோ மற்றும் சென்ட்ரல் மெட்ரோ ஆகிய நிலையங்களிலிருந்து முதல் ரயில் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை அதிகாலை 4:30 மணிக்கு புறப்படும். அதேநாள்களில் கடைசி ரயில் இந்த நிலையங்களிலிருந்து இரவு 11 மணிக்குப் புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You'r reading சென்னை மெட்ரோ ரயில் அதிகாலை முதல் இயக்கம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இந்தியாவில் பள்ளிகள் அதிகம்....ஆனால் கல்வியின் தரம் ‘அடிமட்டம்’ -சர்வே ‘ரிப்போர்ட்’

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்