மே 23ம் தேதிக்கு பிறகு..ரஜினியின் அரசியல் பிரவேசம்..? -சத்யநாராயணராவ் பளிச்

after may 23 know rajini political career

ரஜினியின் அரசியல் நிலைப்பாடு குறித்த சந்தேகங்கள் விரைவில் தெளிவடையும் என அவரின் சகோதரர் சத்யநாராயணராவ் தெரிவித்து உள்ளார்.

முன்னதாக, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் நாள் அன்று ரஜினி ரசிகர்கள், தமிழகத்தில் அடுத்து நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலில் ரஜினி நிச்சம் அரசியலுக்கு வருவார் என்று #அடுத்தஓட்டுதலைவருக்கே #அடுத்தஓட்டுரஜினிக்கே என்ற ஹேஷ்டேக்குகளை ட்விட்டரில் தெறிக்க விட்டு உலகளவில் ட்ரெண்டாகினர். இதனையடுத்து, சட்டமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்கத் தயார்; ரசிகர்களை ஏமாற்றமாட்டேன் என கூறிய ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து தெளிவுபடுத்தினார்.

இதற்கிடையில், ஏழு கட்டங்களாக நடைபெறும் மக்களவை தேர்தலையொட்டி, பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில், நதி நீர் குறித்த முக்கிய அம்சங்கள் வெளியாகின. இதனை, வரவேற்பதாக ரஜினிகாந்த் தெரிவித்து இருந்தார். இதனையடுத்து, பாஜகவுக்கு ஆதரவாக ரஜினி இருக்கிறார் என்ற பேச்சு எழுந்தது.

இந்நிலையில், ரஜினிகாந்த்தின் சகோதரர் சத்யநாராயணராவ் இன்று திருப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பேசிய அவர், ‘தமிழகத்தில் அடுத்து வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நிச்சம் ரஜினிகாந்த் போட்டியிடுவார். பிரதமர் மோடியின் நல்ல திட்டங்களை ரஜினி ஆதரிக்கிறார். ஆனால், மோடிக்கு வாக்களிக்குமாறு ரஜினி ஒருபோதும் கூறியது இல்லை. வரும் மே 23ம் தேதிக்குப் பிறகு ரஜினியின் அரசியல் நிலைப்பாடு குறித்த சந்தேகங்கள் அகலும். அவரின், அரசியல் பிரவேசம் குறித்து தெளிவாகத் தெரியவரும். அரசியலில் ரஜினி வருவதால், கமல்-ரஜினி இடையிலான நட்பு பாதிக்கப்படாது. அவர்களின் நட்பு தொடரும்’ என்று கூறினார்.

சட்டசபைத் தேர்தல் எப்ப வந்தாலும் சந்திக்கத் தயார்! ரஜினி அறிவிப்பு!!

You'r reading மே 23ம் தேதிக்கு பிறகு..ரஜினியின் அரசியல் பிரவேசம்..? -சத்யநாராயணராவ் பளிச் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அமமுக அரசியல் கட்சியாக பதிவு - தேர்தல் ஆணையத்தில் டிடிவி தினகரன் மனு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்