காப்பீட்டு துறையில் 100% அந்நிய முதலீடு விவசாயிகளுக்கு இ-சந்தை

Govt will work with states to allow farmers to benefit from National Agriculture Market or eNAM: FM

விவசாயிகளுக்கு தேசிய விவசாய இ-சந்தை மூலம் பலன் கிடைப்பதற்கு வழிவகை செய்ய மாநிலங்களுடன் இணைநது செயல்படுவோம் என்று பட்ஜெட்டில் நிர்மலா சீத்தாராமன் அறிவித்துள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டில் பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றதும் பல்வேறு அதிரடி முடிவுகளை மேற்ெகாண்டது. இதன்படி, மத்திய பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், பிரதமர் மோடியின் 2வது ஆட்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பொறுப்பேற்றார். அவர் தனது முதல் பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் அவர் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:

இலவச சமையல் எரிவாயு திட்டம் சவுயாக்யா திட்டங்கள் ஊரகப்பகுதி வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியுள்ளன. அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 1.9 கோடி வீடுகள் வழங்கப்படும்.


கடந்த 5 ஆண்டுகளில் 13 ஆயிரம் கிராமசாலைகள் பசுமை திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளன. ரூ80,250 கோடி செலவில் ஒன்றே கால் லட்சம் கி.மீ. தொலைவுக்கு சாலைகள் மேம்படுத்தப்படும்.

கைத்தறித்துறை மூலம் 100 புதிய தொழில் மையங்கள் அமைத்து 50ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.

வேளாண் துறை உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியிலும் தன்னிறைவு பெறுவோம்.

காப்பீட்டு(இன்சூரன்ஸ்) துறையில் நூறு சதவீத அந்நிய முதலீடுகளுக்கு உடனடியாக அனுமதி தரப்படும்.

செபி அமைப்பின் கீழ் சோஷியல் ஸ்டாக் எக்சேஞ்ச் உருவாக்கப்படும்.

விவசாயிகளுக்கு தேசிய விவசாய இ-சந்தை மூலம் பலன் கிடைப்பதற்கு வழிவகை செய்ய மாநிலங்களுடன் இணைநது செயல்படுவோம். விவசாயிகளின் விளைபொருட்களை எளிதில் வியாபாரம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார்.

லேடீஸ் ஹாஸ்டலில் புகுந்த இளைஞர்..! தர்ம அடி கொடுத்த பெண்கள்

You'r reading காப்பீட்டு துறையில் 100% அந்நிய முதலீடு விவசாயிகளுக்கு இ-சந்தை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வாடகைக் குடியிருப்புகளுக்கு விரைவில் புதிய சட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்