மோடி விரும்பினால் மத்தியஸ்தம் செய்யத் தயார் காஷ்மீர் குறித்து அமெ.அதிபர் டிரம்ப் மீண்டும் கருத்து

Kashmir issue, its upto pm Modi to accept offer of mediation, US president Donald Trump says

காஷ்மீர் விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் ஒரு புதிய கருத்தை தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடி விரும்பினால் காஷ்மீர் விவகாரத்தில் தலையிடத் தயார் என்று டிரம்ப் கூறியுள்ளார்.

காஷ்மீர் பிரச்னை, சுதந்திரம் பெற்றது முதலே இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தீர்ந்தபாடில்லை. இதனால் எல்லையில் போர்ப் பதற்றம் நீடிக்க, இரு நாடுகளுமே பாதுகாப்புக்காக செலவிடும் தொகையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. காஷ்மீர் விவகாரத்தில் இரு நாடுகளிடையே பல கட்டப் பேச்சுவார்த்தை நடந்தும் ஒரு முடிவும் எட்டப்படவில்லை. மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றது முதல் காஷ்மீர் விவகாரத்தில் பேச்சுவார்த்தைக் கே இடமில்லை என்றும் அறிவித்துவிட்டது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானோ, பேச்சு நடத்த வேண்டும் என தொடர்ந்து வலிய வலியுறுத்தி வருகிறார்.

சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்த இம்ரான் கான், அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப்பை சந்தித்து பேசினார். இம்ரான் கானுடனான சந்திப்புக்கு பிறகு பேட்டியளித்த டொனால்டு டிரம்ப், பாகிஸ்தானுடனான காஷ்மீர் பிரச்சினையில், மத்தியஸ்தம் செய்யுமாறு பிரதமர் மோடி என்னை கேட்டுக்கொண்டார் என்று டிரம்ப் கூறியிருந்தார்.
டிரம்பின் இந்தக் கருத்து இந்தியாவுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகளும் இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என நெருக்கடி கொடுத்தன.

இதனால், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் டிரம்பின் கருத்தை திட்டவட்டமாக மறுத்தது. காஷ்மீர் விவகாரம் குறித்து அமெரிக்க அதிபரிடம், பிரதமர் மோடி எந்தக் கருத்தோ, சமரசம் செய்யுமாறோ கூறவில்லை என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் மக்களவையில் விளக்கமளித்தார்.

இந்த நிலையில், காஷ்மீர் விவகாரம் குறித்து அமெ.அதிபர் டிரம்ப் இப்போது புதிய கருத்தை தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிரம்பிடம், காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வதை இந்தியா ஏற்க மறுத்தது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த டிரம்ப், காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தத்தை ஏற்றுக்கொள்வது என்பது மோடியிடம் தான் உள்ளது.
மோடியும், இம்ரான் கானும் மிகச்சிறந்தவர்கள். காஷ்மீர் பிரச்சினையில் தலையிட வேண்டும் என்று இருநாடுகளும் விரும்பினால் உதவ தயாராக இருக்கிறேன் என்று டிரம்ப் கூறியுள்ளார்.

டிரம்ப் ‘செட்டப்’ எல்லாம் பண்ண மாட்டார்: அதிபரின் ஆலோசகர் கோபம்

You'r reading மோடி விரும்பினால் மத்தியஸ்தம் செய்யத் தயார் காஷ்மீர் குறித்து அமெ.அதிபர் டிரம்ப் மீண்டும் கருத்து Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 'நாளை ஆடி 18-ம் பெருக்கு நாள்' - பத்திரப்பதிவு அலுவலகங்கள் திறந்திருக்கும்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்