மொகாலி ஒரு நாள் போட்டியில் இந்தியா பேட்டிங் - அணியில் 3 வீரர்கள் மாற்றம்

India Australia 4th one-day match at Mohali

மொகாலியில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது ஒரு நாள் போட்டியில் இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வருகிறது. அணியில் தோனி, அம்பதி ராயுடு, ஜடேஜா, முகம்மது சமிக்கு பதிலாக ரிஷாப் பாண்ட், லோகேஷ் ராகுல், சகால், புவனேஷ்வர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

5 போட்டி தொடரில் முதல் மூன்று போட்டிகளில் 2-1 என இந்தியா முன்னிலையில் உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து ஆடி வருகிறது.

ஆனால் ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச் கூறுகையில் இந்தத் தொடரை உயிர்ப்புடன் வைத்திருக்கவே விரும்புகிறோம். இன்றைய போட்டியிலும் வென்று தொடரையும் கைப்பற்றுவோம் என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று தெரிகிறது

You'r reading மொகாலி ஒரு நாள் போட்டியில் இந்தியா பேட்டிங் - அணியில் 3 வீரர்கள் மாற்றம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அதிமுக-தேமுதிக கூட்டணி உறுதியாகிறது - இன்று இரவு இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்