30 திமுக எம்.எல்.ஏ-க்களை திருப்பிய அந்த 6 பேர்..! அடுத்த நோட்டீஸ் தமிமுன் அன்சாரிக்கு..!

30 dmk mlas ready to support admk next notice send thamimun ansari

டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட கலைச்செல்வன் உட்பட மூன்று எம்.எல்.ஏ-க்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் அண்மையில் நோட்டீஸ் அனுப்பினார். இதை தொடர்ந்து, சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திமுக தலைவர் ஸ்டாலின் பேரவை செயலாளரிடம் மனு அளித்தார். இதனால், ஒரே நாளில் தமிழக அரசியல் களம் பரபரப்பான நிகழ்வுகளை சந்தித்தது.

திமுக தலைவரின் நடவடிக்கைக்கு, ‘3 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது அதிமுகவின் உட்கட்சி விவரம். இதில், ஸ்டாலின் ஏன் கொந்தளிக்கிறார். திமுக தலையிட காரணம் என்ன? இதில் இருந்தே தெரியவில்லை டிடிவி. தினகரன், ஸ்டாலின் இருவரும் கூட்டு சேர்ந்து அதிமுக ஆட்சியை கலைக்க முயற்சி செய்கின்றனர்' என அதிமுக அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக, ஓட்டப்பிடாரம் தொகுதி பிரசாரத்தின் போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, முதல்வர் பழனிசாமி கண் அசைத்தால் போதும் திமுகவில் உள்ள 40 எம்.எல்.ஏ-க்கள் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாக கூறினார். இந்நிலையில், அதிமுக செய்தி தொடர்பாளர் செல்வராஜ், ‘அதிமுக ஆட்சியை அகற்றிவிட்டு, டிடிவி தினகரனும், ஸ்டாலினும் ஆட்சியை கைப்பற்ற துடித்து கொண்டிருக்கிறார்கள். இரட்டை இல்லை சின்னத்தில் போட்டியிட்டு, வெற்றி பெற்ற தமிமுன் அன்சாரி திமுக-வுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். இவர் மீதும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுகவில் இருந்து திமுகவுக்கு சென்ற முன்னாள் அமைச்சர்கள் 6  பேர் திமுக-வில் உள்ள 30 எம்.எல்.ஏ-க்களை எங்கள் பக்கம் திருப்ப தயார் செய்துள்ளனர். அதிமுக அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் வரும்போது, அந்த 30 எம்.எல்.ஏ-க்களும் எங்களுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள். திமுக தலைவர் ஸ்டாலின், சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தால் அது தோல்வியில்தான் முடியும்’ என்றார்.

ஏற்கனவே, அறந்தாங்கி ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகியோர்க்கு நோட்டீஸ் அனுப்பும், அதே சமயம் தமிமுன் அன்சாரி-க்கும் நோட்டீஸ் அனுப்ப வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டது.

அலுவலகங்களை கோயில்களாக...அலுவலர்களைப் பூசாரிகளாக்கிவிடலாம்! கண்டனக் கணைகள் குவியட்டும்! -கி.வீரமணி

You'r reading 30 திமுக எம்.எல்.ஏ-க்களை திருப்பிய அந்த 6 பேர்..! அடுத்த நோட்டீஸ் தமிமுன் அன்சாரிக்கு..! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நடிகைகளே உஷார் - குஷ்பு சொன்ன அவசர எச்சரிக்கை!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்