எதிர்பார்த்த பதவி வேறு.... கிடைத்த பதவி வேறு.... மகிழ்ச்சியில் வானதி சீனிவாசன்!

vanathi srinivasan appointed as bjp national women leader

பாஜகவில் நீண்ட வருடங்களாக இருக்கும் தலைவர் வானதி சீனிவாசன். பல வருடங்களாக இருந்தாலும் அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற பேச்சுக்கள் எழுந்த வண்ணம் இருந்தன. தமிழிசை ஆளுநராக நியமிக்கப்பட்ட பின், காலியாக இருந்த தமிழக பாஜக தலைவர் பதவிக்கு வானதி சீனிவாசன் முயற்சி செய்தார். ஆனால், அந்தப் பதவி எல்.முருகனுக்கு சென்றது. இதன்பின் வெளியான பாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியலில் வானதி சீனிவாசன் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த பாஜக தலைவர்கள் யாரும் இடம்பெறவில்லை.

இதனால் கடும் அதிருப்தியில் அவர்கள் இருந்ததாக கூறப்பட்டது. இதனிடையேதான் வானதி சீனிவாசனை மட்டும் தற்போது பாஜக தேசிய மகளிரணி தலைவராக நியமித்து பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்தப் பதவிக்கான நடைமுறை உடனடியாக நடைமுறைக்கு வருகிறது என்றும் அவர் கூறியிருக்கிறார். இதற்கிடையே, எதிர்பார்த்த பதவி கிடைக்காவிட்டாலும், அதைவிட தேசிய அளவில் அங்கீகாரம் கிடைக்கும் வகையில் வேறு பதவி கிடைத்த மகிழ்ச்சியில் வானதி சீனிவாசன் இருக்கிறார்.

You'r reading எதிர்பார்த்த பதவி வேறு.... கிடைத்த பதவி வேறு.... மகிழ்ச்சியில் வானதி சீனிவாசன்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இந்தியாவிலிருந்து சர்வதேச விமான சர்வீஸ்களுக்கு நவம்பர் 30 வரை தடை தொடரும்.

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்