விரைவில் மேட்டூர் அணை திறக்கப்படும் - எடப்பாடி பழனிசாமி

மேட்டூர் அணை விரைவில் திறக்கப்படும் - முதலமைச்சர்

டெல்டா பாசனத்திற்காக மேட்டூா் அணை விரைவில் திறக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு பருவமழை கா்நாடகா மற்றும் கேரளாவில் போதிய அளவில் பெய்துவருகின்றது. இதனால், கர்நாடகாவில் உள்ள கே.ஆா்.எஸ்., கபினி உள்ளிட்ட அணைகளுக்கு வரக்கூடிய நீரின் அளவு தொடா்ந்து அதிகரித்து வருகிறது

இதனால், கே.ஆா்.எஸ். அணையில் இருந்து 70 ஆயிரம் கனஅடி நீரும், கபினி அணையில் இருந்து 40 ஆயிரம் கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது..

காவிரியில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணையின் நீா்மட்டம் தொடா்ந்து உயா்ந்துகொண்டே வருகிறது. அணையின் நீா்மட்டம் 85 அடியை கடந்துள்ளது. அணையில் இருந்து குடிநீா் தேவைக்காக ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அதிமுக கட்சி விழா மதுரையில் நடைபெற்றது இதில் கலந்துகொண்டு திரும்பிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளா்களிடம் பேசுகையில், டெல்டா பாசனத்திற்காக மேட்டூா் அணை விரைவில் திறக்கப்படும் என்று கூறினார். இதனால் டெல்ட்டா விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

You'r reading விரைவில் மேட்டூர் அணை திறக்கப்படும் - எடப்பாடி பழனிசாமி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஸ்டாலினை யாரும் விமர்சிக்கக் கூடாது - வைகோ

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்