மணல்மேடு சங்கர் மரணத்துக்கு காரணமான பூண்டி கலைவாணன் வேட்பாளரா?. கொந்தளிக்கும் டெல்டா தலித்துகள்

DMK Candidae faces heat in Thiruvarur

தொடர்புடைய செய்திகள்:

கேங் வாராக உருவெடுக்கும் திருவாரூர் இடைத்தேர்தல்... திமுகவுக்கு எதிராக களமிறங்கும் 'மணல்மேடு சங்கர் கோஷ்டி!

திருவாரூர் கேங் வார் ஸ்டார்ட்... ஸ்டாலினின் பூண்டி கலைவாணனை வீழ்த்த மணல்மேடு சங்கரின் சகா காக்குவீரனை அனுப்பும் அழகிரி?

மணல்மேடு சங்கரின் மரணத்துக்கு காரணமான திமுக வேட்பாளராக பூண்டி கலைவாணனுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆதரவு தருவதா? என டெல்டா தலித்துகள் சமூக வலைதளங்களில் கொந்தளிக்கின்றனர்.



(மணல்மேடு சங்கர் -கோப்பு படம்)

காவிரி டெல்டாவில் மணல்மேடு சங்கருக்கும் பூண்டி கலைவாணனின் குடும்பத்துக்கும் ஏழாம் பொருத்தம். இதனால் டெல்டாவில் காவிரி ஓடியதோ இல்லையோ ரத்த ஆறு பாய்ந்தோடியது.

பூண்டி கலைவாணனின் சகோதரர் கலைச்செல்வன் உள்ளிட்ட ஏராளமானோர் இருதரப்பிலும் படுகொலை செய்யப்பட்டனர். மணல்மேடு சங்கர் போலீஸ் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

தற்போது பூண்டி கலைவாணனை திமுக வேட்பாளராக நிறுத்தியிருப்பது மணல்மேடு சங்கரின் ஆதரவாளர்களை கொதிக்க வைத்திருக்கிறது. கலைவாணனுக்கு எதிராக ஜாதிய ரீதியாக அணிதிரட்டும் முயற்சிகளும் நடைபெறுகின்றன.

இதனை வெளிப்படுத்தும் வகையில் மாவீரர் ரெட்டமலை சீனிவாசப்பறையனார் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டிருப்பதாவது:


பறையர் பேரினத்திற்காக 72 வழக்குகளை சுமந்த
மாவீரன் அண்ணன்
#மணல்மேடு_சங்கர் அவர்களின் மரணத்திற்கு காரணமான பூண்டி கலைவாணன் திருவாரூர் திமுக வேட்பாளர் !

என் பறையர் இனமே நாம் என்ன செய்ய போகிறோம்?????

மேலும் பூண்டி கலைவாணனுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆதரவு தெரிவித்துள்ளதற்கும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

You'r reading மணல்மேடு சங்கர் மரணத்துக்கு காரணமான பூண்டி கலைவாணன் வேட்பாளரா?. கொந்தளிக்கும் டெல்டா தலித்துகள் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கடலூர் பரந்தாமனைக் கொன்றது யார்? காதலுக்காக புனே வரை நீண்ட ஆணவக் கொலை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்