திருவாரூர் கேங் வார் ஸ்டார்ட்... ஸ்டாலினின் பூண்டி கலைவாணனை வீழ்த்த மணல்மேடு சங்கரின் சகா lsquoகாக்குவீரனைrsquo அனுப்பும் அழகிரி?

Advertisement

கேங் வாராக உருவெடுக்கும் திருவாரூர் இடைத்தேர்தல்... திமுகவுக்கு எதிராக களமிறங்கும் 'மணல்மேடு சங்கர் கோஷ்டி!

திருவாரூர் மாவட்டச் செயலாளர் ஆக உள்ள பூண்டி கலைவாணன் திமுக வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளார். கலைவாணனை எதிர்த்து அழகிரியால் தொகுதிக்குள் நுழைய முடியாது என்பதை அறிந்து ஸ்டாலின் செய்த தந்திரம் இது என்கிறார்கள் திமுகவினர்.

திருவாரூர் தொகுதி எம்.எல்.ஏ ஆகப் பதவி வகித்து வந்த திமுக தலைவர் கருணாநிதி, கடந்த ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி காலமானார். அவரது மறைவுக்குப் பின்னர் திருவாரூர் தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஜனவரி 28-ம் தேதி திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. வேட்பு மனுத் தாக்கல் ஜனவரி 3-ம் தேதி முதல் தொடங்கிவிட்டது.

திருவாரூர் கருணாநிதியின் தொகுதி என்பதால் திமுக-வின் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்படப்போவது யார் என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில், விருப்பமனுத் தாக்கலின் போது திருவாரூர் மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவானன், 'திமுக தலைவர் ஸ்டாலின் தான் கருனாநிதியின் தொகுதியில் நிற்கத் தகுதியான நபர்' என முன்மொழிந்தார்.

ஆனால், தற்போது பூண்டி கலைவாணன் தி.மு.க-வின் திருவாரூர் தொகுதி வேட்பாளராக கட்சியின் சார்பில் முன்னிறுத்தப்பட்டுள்ளார். இந்தப் போட்டிக்காக 25 நபர்கள் விருப்பமனு தாக்கல் செய்திருந்தனர்.

இதிலிருந்து 9 பேர் நேற்று நேர்காணலுக்காக அழைக்கப்பட்டு அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவராக பூண்டி கலைவாணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

கலைவாணனை வேட்பாளராக அறிவித்ததில் அழகிரிக்கு அதிர்ச்சியடைந்துவிட்டாராம். ஸ்டாலின் குடும்பத்தில் இருந்து யாராவது போட்டியிடலாம் என அவர் எதிர்பார்த்திருந்தார். திருவாரூர் தொகுதிக்குள் ரௌடியிஸத்தைக் கையில் வைத்துக் கொண்டு அதிரடி காட்டி வருகிறார் கலைவாணன்.

மறைந்த மணல்மேடு சங்கரின் கூட்டாளிகளால் அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதை அறிந்து போலீஸ் பலத்தோடு வலம் வருகிறார். மணல்மேடு சங்கரின் விசுவாசியான காக்குவீரன், தற்போது அழகிரி முகாமில் கேம்ப் அடித்திருக்கிறார். இது கலைவாணனுக்குக் கூடுதல் கோபத்தைக் கொடுத்திருக்கிறது.

அழகிரி போட்டியிட வந்தால், கலைவாணன் தரப்பினர் கடுமையான மோதலை நடத்துவார்கள் என்பதை ஸ்டாலின் அறிவார். அதனால்தான் அழகிரிக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் கலைவாணனை வேட்பாளராக நிறுத்தினாராம்.

இப்போது கலைவாணனை தோற்கடிக்க காக்குவீரனை களமிறக்குகிறாராம் அழகிரி. பூண்டி கலைவாணன் குடும்பம் சம்பாதித்திருக்கும் ஜாதிய பகைகளை ஒருங்கிணைப்பதுதான் காக்குவீரனுக்கான அசைன்மெண்ட்டாம்.

ஏற்கனவே கலைவாணன் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வாக்கு சிதறும் நிலையில் அழகிரி முகாமில் இருந்து காக்குவீரன் இறக்கப்பட்டு இதர சமூகத்தை ஒருங்கிணைத்தால் நிச்சயம் திமுகவுக்கு பெரும் நெருக்கடி என்கிறார்கள்.

-அருள் திலீபன்

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
/body>