ரெட்மி நோட் 7 ப்ரோ - மார்ச் 20 முதல் விற்பனை

Redmi Note 7 Pro, Redmi Note 7 to Go on Sale in India Today: Price, Specifications

பிப்ரவரி 28ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 7 ப்ரோ மற்றும் நோட் 7 ஆகிய இரண்டு ஸ்மார்ட் போன்களும் மார்ச் 20ம் தேதி முதல் விற்பனைக்கு வந்துள்ளன.

ஃபிளிப்கார்ட், Mi.com இணையதளங்கள் மற்றும் Mi Home அங்காடிகளில் மார்ச் 20 நண்பகல் 12 மணி முதல் விற்பனையாகின்றன.

ரெட்மி நோட் 7 போன் விலை

3 ஜிபி RAM இயக்க வேகம் 32 ஜிபி சேமிப்பளவு ரூ. 9,999/-

4 ஜிபி RAM இயக்க வேகம் 64 ஜிபி சேமிப்பளவு ரூ.11,999/-

ரெட்மி நோட் 7 போனின் சிறப்பம்சங்கள்:

தொடுதிரை: 6.3 அங்குலம் எஃப்ஹெச்டி வகை மற்றும் 1080X2340 பிக்ஸல் தரத்தில்

கூடுதல்: கொரில்லா கிளாஸ் 5; வாட்டர்டிராப் ஸ்டைல் நாட்ச்

பிராசஸர்: குவல்காம் ஸ்நப்டிராகன் 660 ஆக்டா கோர்; சிப் ஆன் சிஸ்டம்

இயக்க வேகம்: 3 ஜிபி மற்றும் 4 ஜிபி RAM

சேமிப்பளவு: 32 மற்றும் 64 ஜிபி (256 ஜிபி வரைக்கும் கூடுதல் சேமிப்பளவு கொள்ளலாம்)

பின்பக்க காமிரா: 12 எம்பி மற்றும் 2 எம்பி ஆற்றல் கொண்ட இரண்டு பின்புற காமிராக்கள்

முன்பக்க காமிரா: 13 எம்பி ஆற்றல் கொண்டது

இயங்குதளம்: MIUI 10 உடன் கூடிய ஆண்ட்ராய்டு 9 பை

பேட்டரி: 4000 mAh ஆற்றல் கொண்டது. குயிக் சார்ஜ் 4.0 வசதி கொண்டது

பின்புறம் விரல் ரேகை உணரி (ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்). யூஎஸ்பி டைப் சி போர்ட், இரட்டை சிம், ப்ளூடூத் 5.0 மற்றும் வைஃபை 5, பயனர் முகத்தை கடவுச் சொல்லாக பயன்படுத்தும் வசதிகளும் இதில் உள்ளன.

செயற்கை நுண்ணறிவு (AI) திறன் கொண்ட ரெட்மி நோட் 7 ஸ்மார்ட் போன், மார்ச் 6ம் தேதி 12 மணிக்கு விற்பனைக்கு வரும்.

ரெட்மி நோட் 7 ப்ரோ போன் விலை

4 ஜிபி RAM இயக்க வேகம் 64 ஜிபி சேமிப்பளவு ரூ. 13,999/-

6 ஜிபி RAM இயக்க வேகம் 128 ஜிபி சேமிப்பளவு ரூ.16,999/-

ரெட்மி நோட் 7 ப்ரோ போனின் சிறப்பம்சங்கள்:

தொடுதிரை: 6.3 அங்குலம் எஃப்ஹெச்டி வகை மற்றும் 19.5:9 விகிதாச்சாரம்

கூடுதல்: வாட்டர்டிராப் ஸ்டைல் டாட் நாட்ச்

பிராசஸர்: ஆக்டா கோர் குவல்காம் ஸ்நாப்டிராகன் 675; சிப் ஆன் சிஸ்டம்

இயக்க வேகம்: 4 ஜிபி மற்றும் 6 ஜிபி RAM

சேமிப்பளவு: 64 மற்றும் 128 ஜிபி (256 ஜிபி வரைக்கும் கூடுதல் சேமிப்பளவு கொள்ளலாம்)

பின்பக்க காமிரா: 48 எம்பி மற்றும் 5 எம்பி ஆற்றல் கொண்ட இரண்டு பின்புற

காமிராக்கள். செயற்கை நுண்ணறிவு (AI) கொண்டவை. நைட் மோட் என்னும் இரவில் படமெடுக்கும் ஆற்றல் கொண்டவை.

முன்பக்க காமிரா: 13 எம்பி ஆற்றல் கொண்டது

இயங்குதளம்: MIUI 10 உடன் கூடிய ஆண்ட்ராய்டு 9 பை

பேட்டரி: 4000 mAh ஆற்றல் கொண்டது. குயிக் சார்ஜ் 4.0 வசதி கொண்டது

பின்புறம் விரல் ரேகை உணரி (ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்). யூஎஸ்பி டைப் சி போர்ட், இரட்டை சிம், ப்ளூடூத் வி5.0 மற்றும் வைஃபை 802.11ac, பயனர் முகத்தை கடவுச் சொல்லாக பயன்படுத்தும் வசதிகளும் இதில் உள்ளன.

You'r reading ரெட்மி நோட் 7 ப்ரோ - மார்ச் 20 முதல் விற்பனை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இன்று சர்வதேச சிட்டுக்குருவிகள் தினம் ; சிட்டுக்குருவி பற்றிய சின்ன சின்ன சேதிகள்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்