மியூஐ பீட்டா பயனர் இடைமுகம் ஜூலை முதல் ரத்தாகிறது

Xiaomi ending MIUI beta programme for all devices from July 1

பயனர்களிடமிருந்து போதிய பின்னூட்டங்கள் இல்லாததை முன்னிட்டு உலக அளவில் மியூஐ (MIUI) பீட்டா பயனர் இடைமுக பயன்பாட்டை ரத்து செய்ய இருப்பதாக ஸோமி நிறுவனம் அறிவித்துள்ளது.

ஸோமி நிறுவனத்தின் தயாரிப்புகளான அனைத்து ஸ்மார்ட்போன்களும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை பயன்படுத்தி வருகின்றன. அவற்றுள் ஆண்ட்ராய்டு ஒன் மற்றும் ஆண்ட்ராய்டு கோ ஆகியவற்றை பயன்படுத்தாத அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் மேலாக மியூஐ (MIUI) என்ற பயனர் இடைமுகம் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

இந்த பயனர் இடைமுகத்தின் பீட்டா வடிவின் புதிய சிறப்பம்சங்களை பரிசோதனை அடிப்படையில் வெளியிட்டு, குறைபாடுகளை (bug) தெரிவிக்குமாறு ஸோமி நிறுவனம் பயனர்களை கேட்டுக்கொண்டிருந்தது. அப்படி தெரிவிக்கப்படும் குறைபாடுகளை தொழில்நுட்ப வல்லுநர்களை கொண்டு சரி செய்து மேம்பட்ட பீட்டா வடிவத்தை நிரந்தர பயன்பாட்டுக்கு அளிக்கவும் முடிவு செய்திருந்தது.

மியூஐ இடைமுகத்தின் பீட்டா வடிவை அதிக எண்ணிக்கையிலான பயனர்கள் பயன்படுத்தி வந்தாலும் மிகக்குறைந்த எண்ணிக்கையிலானவர்களே பின்னூட்டமிட்டனர். ஆகவே, வரும் ஜூலை 1ம் தேதி முதல் மியூஐ பயனர் இடைமுகத்தின் பீட்டா வடிவ பயனர் இடைமுக சேவையை நிறுத்திக்கொள்ள ஸோமி நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

இன்ஃபினிட்டி-ஓ டிஸ்பிளே கொண்ட கேலக்ஸி எம்40 போன் அறிமுகம்

You'r reading மியூஐ பீட்டா பயனர் இடைமுகம் ஜூலை முதல் ரத்தாகிறது Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மேட்ரிமோனியல் நிறுவனங்களை கண்காணிக்க வழிகாட்டுதல் அமைக்கக்கோரிய மனு மீது ஜூலை 9-ல் விசாரணை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்