சாம்சங் நிறுவனத்தின் தயாரிப்பான கேலக்ஸி எம் வரிசையில் நான்காவது ஸ்மார்ட்போன் கேலக்ஸி எம்40 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எம்10, எம்20, எம்30 தயாரிப்புகளை தொடர்ந்து எம்40 விற்பனைக்குத் தயாராக உள்ளது. ஜூன் 18ம் தேதி நண்பகல் 12 மணிக்கு அமேசான் இந்தியா (Amazon India) மற்றும் சாம்சங்கின் இணையதளம் (Samsungs online shop) மூலம் விற்பனை ஆரம்பமாகும்.
சாம்சங் கேலக்ஸி எம்40 சிறப்பம்சங்கள்:
தொடுதிரை: 6.3 அங்குலம் எஃப்ஹெச்டி; 2340X1080 பிக்ஸல் தரம்; இன்ஃபினிட்டி-ஓ எல்சிடி (கொரில்லா கிளாஸ்)
இயக்கவேகம்: 6 ஜிபி RAM
சேமிப்பளவு: 128 ஜிபி சேமிப்பளவு, 512 ஜிபியாக அதிகரிக்கும் வசதி
முன்பக்க காமிரா: 16 எம்பி ஆற்றல்
பின்பக்க காமிரா: 32 எம்பி; 8 எம்பி; 5 எம்பி ஆற்றல் கொண்ட முதன்மை, வைட்ஆங்கிள்
மற்றும் டெப்த் என மூன்று காமிராக்கள்
பிராசஸர்: 2 GHz ஆக்டாகோர் ஸ்நாப்டிரகன் 675 சிப்செட்
மின்கலம்: 3500mAh மின்சேமிப்பு ஆற்றல்
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு பை (One UI)
சாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனுக்கு ரூ.19,999 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சலுகைகள்
ஜியோ பயனர்களுக்கு ரூ.198 மற்றும் ரூ.299 ரீசார்ஜ்களுக்கு ரூ.3,110 மதிப்புள்ள டேட்டா, வோடஃபோன்- ஐடியா பயனர்களுக்கு ரூ.255 ரீசார்ஜ் செய்யும்போது ஒவ்வொன்றும் ரூ.75 மதிப்புள்ள 50 ரீசார்ஜ் கூப்பன்கள் மொத்தம் 3,750 ரூபாய்க்கு அதனுடன் 18 மாதங்களுக்கு தினமும் 512 எம்பி டேட்டா, ஏர்டெல் பயனர்களுக்கு ரூ.249 மற்றும் ரூ.349 திட்டங்களுக்கு தினமும் 4ஜிபி மற்றும் 6ஜிபி டேட்டாவுக்கு 10 மாதங்களுக்கு 100 விழுக்காடு அதிக டேட்டா ஆகிய சலுகைகளும் வழங்கப்படுகிறது.