திடீரென நேர்கொண்ட பார்வை டிரைலர் அறிவிப்பு ஏன் தெரியுமா?

ஆகஸ்ட் 10ம் தேதி அஜித்தின் நேர்கொண்ட பார்வை ரிலீசாகிறது. அதன் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது என இன்று காலை அதிரடி அறிவிப்பாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார்.

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் நேர்கொண்ட பார்வை. அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியான பாலிவுட் படமான பிங்க் படத்தின் ரீமேக் தான் இந்த நேர்கொண்ட பார்வை.

அஜித் ரசிகர்களை குஷிபடுத்தும் விதமாக இந்த படத்தில் பல்வேறு மாறுதல்களை இயக்குநர் வினோத் செய்துள்ளார். பிங்க் படத்தில் அமிதாப் பச்சனுக்கு நாயகி இல்லை. ஆனால், இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை வித்யா பாலன் நடித்துள்ளார்.

மேலும், டாப்ஸி நடித்த வேடத்தில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட முக்கிய நடிகர்களும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தவிர வேறு எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகாத நிலையில், இன்று திடீரென நேர்கொண்ட பார்வை டிரைலர் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் டீசர் கூட ரிலீசாகாத நிலையில், டிரைலர் ரிலீசாகும் அறிவிப்பு அஜித் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருந்தாலும், நேற்று முதல் ட்விட்டரில் விஜய்யின் #Me-Vijay டிரெண்டிங்கில் இருந்ததை பிரேக் செய்யவே திடீரென இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக விஜய் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

Advertisement
More Cinema News
aishwarya-lekshmi-learns-to-drive-a-boat-for-mani-ratnams
படகு ஓட்ட பயிற்சி பெறும் நடிகை.. கேரள ஆற்றில் டிரெயினிங்..
kamalhaasans-papanasam-to-be-remade-in-chinese
சீன மொழியில்  ரீமேக் ஆன கமல் திரைப்படம்.. எந்த படம் தெரியுமா?
vijay-sethupathis-story-on-farmers
கடைசி விவசாயி ஆன விஜய்சேதுபதி...டிரெய்லர் வெளியிட்ட நடிகர்..
archana-kalpathis-announcement-on-50th-day-of-bigil
பிகில் 50வது நாளில் தயாரிப்பாளர்-ரசிகர்கள் கொண்டாட்டம்.. சாதனை வசூல்..
kajal-aggarwal-to-marry-a-businessman-soon
காஜல் அகர்வால் விரைவில் திருமணம்.. இளம் தொழில் அதிபருடன் காதல்..
did-raghava-lawrence-refuse-to-work-with-kamal-haasan
கமல் படத்தில் நடிக்க மறுத்த லாரன்ஸ்.. மீண்டும் சர்ச்சை பேச்சு..
actress-indhuja-enjoys-rajini-film-baasha
முக்காடுபோட்டு ரஜினி படம் பார்க்க சென்ற நடிகை.. பாட்டு வந்ததும் விசிலடித்து கும்மாளம்..
thalapathy-64-song-update-anirudh-reply-to-his-fan
தளபதி 64 பாடல்: அனிருத் அப்டேட்.. பரவசமாகிப்போனேன்..
akshay-kumar-gifts-onion-earrings-to-twinkle-khanna
ரஜினி பட வில்லன் வாங்கி வந்த வெங்காய ஜிமிக்கி .. மனைவியிடம் அரட்டை கச்சேரி..
gautham-menon-talks-about-the-success-of-yennai-arindhaal
அஜீத் படம் பற்றி கவுதம் மேனன் முரண்
Tag Clouds