இ-லிங்க் மற்றும் 7.8 அங்குல திரையுடன் இ-புக் ரீடர் அறிமுகம்

ஸோமி மி ரீடர் ப்ரோ சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த மி ரீடர் வெளியானதைத் தொடர்ந்து இது அறிமுகமாகியுள்ளது. புழக்கத்தில் உள்ள ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்களை கண்களுக்கு இது இதமானது. அதற்கான இ-லிங்க் டிஸ்பிளே இதில் உள்ளது. 7.8 அங்குல திரை கொண்டது. இந்த திரை வாசிப்பதற்கு வசதியாக வெளிச்சத்தை மாற்றியமைக்கும் தெரிவு கொண்டது. இதில் நிறங்களையும் மாற்றலாம்.

மி ரீடர் ப்ரோ சிறப்பம்சங்கள்

7.8 அங்குல திரை கொண்ட மி ரீடர் ப்ரோ ஆண்ட்ராய்டு 8.1 இயங்குதளத்தில் செயல்படுகிறது. 1878X1404 பிக்ஸல் தரம் கொண்டது. குவாட் கோர் பிராசஸர் கொண்ட இது 2ஜிபி இயக்கவேகம் மற்றும் 32 ஜிபி சேமிப்பளவு கொண்டது. 3200 mAh மின்கலம் 10W சார்ஜிங் ஆற்றல் கொண்டது. டூயல் பேண்ட வைஃபை மற்றும் புளூடூத் 5.0 வசதிகளும் உண்டு. பக்கங்களைத் திருப்புவதற்கு இபிடிசி (EPDC) கண்ட்ரோலர் உள்ளது. இந்த இ-புக் ரீடர் 192.1X138.6X7 மிமீ பரிமாணத்தில் 251 கிராம் எடை கொண்டதாக இது கிடைக்கும்.
வாய்ஸ் ஸியர்ச், பைடு கிளவுடு, வீசாட் ரீடிங் மற்றும் .txt, .epub, .pdf, .xlsx, .ppt, .doc போன்ற வகை கோப்புகளை இதன் மூலம் வாசிக்கலாம். WLAN அல்லது USB இணைப்பைப் பயன்படுத்தி புத்தகங்களை இதற்குப் பரிமாற்றம் செய்யலாம். சீனாவில் இந்திய மதிப்பில் ஏறத்தாழ ரூ12,400 விலையில் (CNY 1,099) விற்கப்படும் மி ரீடர் ப்ரோ மற்ற நாடுகளில் எப்போது விற்பனைக்கு வரும் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.

You'r reading இ-லிங்க் மற்றும் 7.8 அங்குல திரையுடன் இ-புக் ரீடர் அறிமுகம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பெண்களின் அழகு சீக்ரெட்.. ஆண்கள் கூட பயன்படுத்தலாம்..!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்