`மாட்டு மூத்திரம் குடிப்பவர்கள் இந்துக்கள் நாங்கள் அப்படி இல்லை - பாக் அமைச்சர் சர்ச்சை பேச்சு

pakistan minister Chohan under fire from all sides over

மாட்டு மூத்திரம் குடிப்பவர்கள் இந்துக்கள் என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார் பாகிஸ்தான் மந்திரி ஒருவர்.

பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் செய்தி மற்றும் கலாச்சார மந்திரியாக இருப்பவர் பையாசூல் ஹசன் சோகன். இவர் தான் இப்படி பேசியுள்ளார். சமீபத்தில் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ``இந்தியாவில் உள்ள இந்துக்கள் அனைவரும் பசுவின் மூத்திரத்தை குடித்து வாழ்பவர்கள். ஆனால் பாகிஸ்தானியர்கள் அப்படி இல்லை. பாகிஸ்தானியர்களுக்கு என தனி கொடி, தனி அடையாளம் இருக்கிறது. இந்துக்களுக்கு அப்படி எந்த அடையாளமும் இல்லை. அதேபோல் இந்துக்கள் சிலை வழிபாடு செய்பவர்கள். இதனால் எப்போதும் அவர்கள் ஒரு மாயை நிலையிலேயே இருக்கிறார்கள். அதனால் தான் இஸ்லாமியர்களே விட ஏழு மடங்கு சிறப்பாக இருப்பதாக இந்துக்கள் கூறி வருகிறார்கள்.

ஆனால் இங்கே சிலை வழிபாடு கிடையாது. இஸ்லாமியர்கள் செய்யும் வழிபாட்டை இந்துக்களால் செய்ய முடியாது" எனப் பேசினார். புல்வாமா தாக்குதலை தொடர்ந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் போர் ஏற்படும் சூழ்நிலை நிலவி வரும் வேளையில் இவர் இப்படி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. பாகிஸ்தான் அரசியல்வாதிகள் பலரும் சோகனின் விமர்சனத்துக்கு கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் இவரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

You'r reading `மாட்டு மூத்திரம் குடிப்பவர்கள் இந்துக்கள் நாங்கள் அப்படி இல்லை - பாக் அமைச்சர் சர்ச்சை பேச்சு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஒரு நாள் போட்டியில் 40-வது சதமடித்த கோஹ்லி - சச்சின் சாதனையை முறியடிக்க வாய்ப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்