நவாஸ் ஷெரீப் கிரிமினல், ஏ.சி, டி.வி கிடையாது: இம்ரான்கான் பேச்சு

Wont Allow Air Conditioning, TV For Nawaz Sharif In Jail: Imran Khan

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், ‘‘நவாஸ் ஷெரீப் ஒரு கிரிமினல். அவருக்கு சிறையில் ஏ.சி, டி.வி. வசதிகள் எதுவும் கொடுக்கக் கூடாது’’ என்று பேசியுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் நேற்று அங்கு வசிக்கும் பாகிஸ்தானி மக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்ேபாது அவர் கூறுகையில், ‘‘பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஒரு கிரிமினல் குற்றவாளி. சிறையில் அவருக்கு வீட்டுச் சாப்பாடு வேண்டுமாம். இப்போது அவருக்கு சிறையில் ஏ.சி, டி.வி. வசதிகள் தரப்பட்டுள்ளன. நாட்டில் 50 சதவீதத்திற்கும் அதிகமான மக்களிடம் ஏ.சி. வசதி இல்லாத நிலையில், ஒரு கிரிமினல் குற்றவாளிக்கு அது கொடுக்கப்படலாமா? நான் நாடு திரும்பியதும் அதையெல்லாம் ‘கட்’ செய்ய உத்தரவிடுவேன்.

இதற்காக பிஎம்எல்(என்) கட்சித் தலைவர் மரியம் பீவி, பிரச்னையை கிளப்புவார். நான் அவருக்கு சொல்வது, நீங்கள் கொள்ளை அடித்த பணத்தை திருப்பி கொடுங்கள் என்பதுதான்.

பாகிஸ்தானில் ஊழல்வாதிகளிடம் இருந்து சொத்துக்களை பறிமுதல் செய்து வருகிறோம். அவர்கள் வெளிநாடுகளில் சேர்த்து வைத்துள்ள சொத்துக்களை மீட்டுவருவதற்காக அந்த நாடுகளிடம் பேச்சு நடத்தி வருகிறோம்’ என்றார்.

அமெரிக்காவில் உள்ள இம்ரான்கான், அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப்பை சந்தித்து பேசவிருக்கிறார். அவருடன் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஹமீதும் செல்கிறார்.

இம்ரான்கானின் அட்வைஸை கேட்காதது ஏன்? - பாக்.கேப்டனை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்

You'r reading நவாஸ் ஷெரீப் கிரிமினல், ஏ.சி, டி.வி கிடையாது: இம்ரான்கான் பேச்சு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கோபத்தில் அப்படி பேசி விட்டேன்; கவர்னர் விளக்கம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்