பொள்ளாச்சி அருகே கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்து - 2 குழந்தைகள் உட்பட ஆறு பேர் பலியான பரிதாபம்

Mar 13, 2019, 08:28 AM IST

பழநிக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த கார், பொள்ளாச்சி அருகே நள்ளிரவில், கால்வாயில் கவிழ்ந்த விபத்தில், ஆறு பேர் உயிரிழந்தனர்.

கோவை மசக்காளிபாளையம் பகுதியை சேர்ந்தவர்கள், காரில் பழநிக்கு சென்றுவிட்டு நேற்றிரவு கோவைக்கு புறப்பட்டனர். நள்ளிரவில், பொள்ளாச்சி அருகே உடுமலை ரோடு கெடிமேடு பகுதியில் வந்து கொண்டிருந்த போது, கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் உள்ள பிஏபி கால்வாயினுள் கவிழ்ந்தது.

நள்ளிரவு நேரம் என்பதால், உதவிக்கு யாரும் வர இயலாத சூழலில், அதில் இருந்தவர்களில் இரண்டு பெண் குழந்தைகள் உட்பட ஆறு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு இன்று காலை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

இறந்தவர்கள் கோவை மசக்காளிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் (48), பூஜா (45), தாரணி (50), குழந்தைகள் சுமதி (8), லதா (9) உள்ளிட்ட 6 பேர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.


More Akkam pakkam News

அதிகம் படித்தவை