குடியரசு தினவிழாவில் ‘நான் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டேன், பாஜக செயற்பாட்டாளரை ஆதரிக்க மாட்டேன்’ என மாணவர்கள் உறுதிமொழி யேற்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலானது பாஜகவினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.
மத்தியப்பிரதேசம் இட்டார்சி விஜயலட்சுமி தொழிற்கல்வி பயிற்சி நிலையத்தில் குடியரசு தினத்தையொட்டி மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
அதில், உறுதிமொழிக்காக அணி வகுத்து நின்ற மாணவர்கள், ‘நான் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டேன், பாஜக செயற்பாட்டாளரை ஆதரிக்க மாட்டேன்’ என கைகளை முன்பக்கம் நீட்டி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.
இது குறித்து ஆசிரியர்கள் கேட்டதற்கு பதிலளித்துள்ள மாணவர்கள், “மோடி அரசாங்கம் ஐடிஐ தேர்வுகளை ஆன்லைனில் நடத்தும் முடிவை நிறுத்தும் வரை நாங்கள் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டோம். அதற்காக மட்டுமல்லாது பாஜகவுடன் எவ்விதத்திலும் ஒத்துழைக்க முடியாது” என தெரிவித்துள்ளனர்.
தவிர பாஜகவின் ஊழல்கள் மற்றும் வன்முறைகள் குறித்தும் மாவட்டத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்த உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
வீடியோ இங்கே: