உயிரிழந்த உஷாவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி உதவி: கமல் அறிவிப்பு

Mar 9, 2018, 07:40 AM IST

திருச்சியில், காவல் ஆய்வாளர் தாக்கியதால் உயிரிழந்த கர்ப்பிணி பெண் உஷாவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் நேற்று மகளிர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், திருச்சியில் உஷா என்ற கர்ப்பிணி பெண் காவல் ஆய்வாளர் தாக்கியதால் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்ந்து, உஷாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிவாரண நிதி வழங்குவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். உஷாவின் கணவருக்கு போன் செய்து ஆறுதல் தெரிவித்த நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தற்போது, உஷாவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, ராயப்பேட்டையில் நேற்று மக்கள் நீதி மய்யம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மகளிர் தின விழாவில் கலந்துக் கொண்ட கமல் தெரிவித்தார்.
இதுகுறித்து நிகழ்ச்சியில் மேற்கொண்டு கமல் பேசியதாவது: தாய் சொல்லை தட்டதாவன் நான். அதனால் தான் இந்த மேடையில் நிற்கிறேன். மய்யத்தில் இருந்து பார்த்தால் தான் நீதியும், நியாயமும் புரியும், பெண்களை மதிக்கச் சொல்லிக் கொடுத்தவர் என் தாய். வீரத்தின் உச்சக்கட்டம் அகிச்சை. அதைச் சொல்லாமல் சொன்னவர் என் தாய். எனக்கு புடவை கட்டத்தெரியும். அதை மீசையை முறுக்கிச் சொல்வேன். உனக்கு பெண்களைப் பற்றி என்ன தெரியும் எனக் கேட்கிறார்கள். எனக்கு புரிந்து கொள்ளத் தெரியும்.

திருச்சியில் உஷா மரணத்தில் அநீதி நிகழ்ந்துள்ளது. நீதியைக் காக்க வேண்டியவர்கள் அநீதியை செய்துள்ளனர். சிறப்பாக செயல்படும் காவல்ர்களை பாராட்டாமல், தவறாக செயல்படும் காவலர்களை தண்டிக்க முடியாது. திருச்சியில் போலீசாரின் வாகன சோதனையின்போது உயிரிழந்த உஷாவின் குடும்பத்தினருக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும். இவ்வாறு கமல் பேசினார்.

You'r reading உயிரிழந்த உஷாவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி உதவி: கமல் அறிவிப்பு Originally posted on The Subeditor Tamil

More Akkam pakkam News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை