காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட வேண்டும்: பிரதமருக்கு கிரண்பேடி கடிதம்

Apr 2, 2018, 18:49 PM IST

காவிரி மேலாண்ணை வாரியம் அமைக்க வேண்டும் என்றும் அதற்கான உத்தரவை உரிய அதிகாரிகளுக்கு பிறப்பிக்க வேண்டும் என புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் 45 நாட்கள் கால அவகாசம் வழங்கியும் மத்திய அரசு அமைக்கவில்லை. இதனால், தமிழக அரசியல் கட்சிகள் மத்திய அரசை கண்டித்து போரட்டங்களை நடத்தி வருகிறது.

இதையடுத்து, மத்திய அரசு 3 மாத கால அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இதனால், மேலும் கொந்தளித்த தமிழகத்தில் பல இடங்களில் மாணவர்களும், பொது மக்களும் போராட்டங்களை நடத்தி வருகிறன்றனர்.

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு புதுச்சேரி கவர்னர் கிரண் பேடி கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், “தமிழகத்தில் இருந்து 7 டிஎம்சி தண்ணீர் புதுச்சேரியை சேர்ந்த காரைக்கால் பகுதிக்கு அவசியம் தேவை. கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு எப்படி காவிரி நீர் அவசியமோ, அதேபோல் தமிழகத்தில் இருந்து காரைக்கால் பகுதிக்கு 7 டிஎம்சி காவிரி நீர் மிக அவசியம்”. இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட வேண்டும்: பிரதமருக்கு கிரண்பேடி கடிதம் Originally posted on The Subeditor Tamil

More Akkam pakkam News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை