ஆண்களைப் போல் பெண்களும் ஜீன்ஸ், டிஷர்ட் உள்ளிட்ட ஆடைகள் அணிந்தால் திருநங்கை குழந்தை தான் பிறக்கும் என கேரளாவின் தாவரவியல் பேராசிரியர் ரெஜித் குமார் கூறிய கருத்து சர்ச்சைக்குள்ளாகியது.
கேரள மாநிலம் காலடி என்ற பகுதியில் ஸ்ரீ சங்கரா கமஸ்கிருத பல்கலைக்கழகம் உள்ளது, இங்கு, தாவரவியல் துறையில் பேராசிரியராக ரெஜித் குமார் என்பவர் பணியாற்ற வருகிறார். இவர், மாணவர்களுக்கு விழிப்புணர்வு வகுப்புகளை நடத்த கேரள அரசு நியமித்துள்ளது. அதன்படி, காசர்கோடு நகரில் உள்ள கல்லூரி ஒன்றில் விழிப்புணர்வு வகுப்பு நடத்தச் சென்றார்.
அப்போது அவர் மாணவர்கள் மத்தியில் பேசுகையில், “ஆண்களைப் போல் ஜீன்ஸ், ஷர்ட் உள்ளிட்ட ஆடைகளை அணியும் இளம்பெண்களுக்கு திருநங்கைதான் பிறக்கும்ற. இதனால் தான், கேரளாவில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட திருநங்கைகள் உள்ளனர். நல்ல நடத்தை இல்லாத பெற்றேரின் குழந்தைகள் ஆட்டிசம் மற்றும் மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்படுகிறார்கள் ” என்றார்.
இவரது பேச்சு மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கருத்து தீயாய் பரவியதை அடுத்து, கேரள அரசு அவருக்கு கண்டனம் தெரிவித்தது. இருப்பினும், பேராசிரியர் தனது கருத்தை வாபஸ் பெறவில்லை.
இதனால், பேராசிரியர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு சார்பிலான விழிப்புணர்வு வகுப்புகள் நடத்த அவரை அனுமதிக்க மாட்டோம் என்றும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா தெரிவித்துள்ளார்.