விண்ணில் ஏவப்பட்டு சில மணி நேரங்களில் தொடர்பு இணைப்பு துண்டிக்கப்பட்ட ஜிசாட் 6ஏ செயற்கைகோளின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
நெல்லை அரசு இன்ஜினியரிங் கல்லூரி எதிரே கடற்படைக்கு சொந்தமான இடத்தில் 82 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயற்கைகோள் கண்காணிப்பு தகவல் சேகரிப்பு மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று நடைபெற்றது. இதில், பங்கேற்ற இஸ்ரோ தலைவர் சிவன் இன்று அடிக்கல்லை நாட்டினார்.
இதன் பிறகு பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், “ஜிஎஸ்எல்வி எப் 08-ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பப்ட்ட செயற்கை கோளான ஜிசாட் 6 ஏ செயற்கை கோள்கள் மற்றும் டெலஸ்கோப் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதனுடன் தொலை தொடர்பு இணைப்பை ஏற்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகின்றனர். விரைவில் தொலை தொடர்பை ஏற்படுத்திவிடுவோம்” என்று தெரிவித்தார்.