மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க வரும் மே 7ம் தேதி அடிக்கல் நாட்டு விழா நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு செம்டம்பர் 22ம் தேதி உடல்நலக் குறைவால் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன் பிறகு, 75 நாட்களாக மருத்துவமனையில் இருந்த நிலையில், டிசம்பர் 5ம் அவர் மறைந்தார்.
இவரது, உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் ரூ.50 கோடி செலவில் நினைவிடம் அமைய உள்ளதாக ஏற்கனவே தமிழக அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், மே 7ம் தேதி காலை 8.30 மணிக்கு மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.